Jump to ratings and reviews
Rate this book

விதி எழுதும் விரல்கள்

Rate this book
திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனி மனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை சூழ்ச்சி, குடும்பம், பாசம், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் இந்த நாவல் படித்து முடித்

315 pages, Kindle Edition

Published October 22, 2019

6 people are currently reading
6 people want to read

About the author

N Ganeshan

2 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (51%)
4 stars
8 (29%)
3 stars
4 (14%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 3 of 3 reviews
2,121 reviews1,109 followers
October 24, 2019
நமக்கு மிக மிக பழக்கமான கதைகரு. ஒரே இடத்தில் குவிந்திருக்கும் செல்வத்தைக் கலைத்து தேவைப்படுபவர்களுக்கு அளிப்பது.

“ஏமாற்றுபவர்களை ஏமாற்றுவதில் தவறில்லை” இந்தக் கொள்கையை வசந்த் சொல்லும் போதே எதை நோக்கி அவனின் பயணம் இருக்கிறது என்று பிடிபடத் துவங்குகிறது.

நாவலின் தொடக்கத்திலே வசந்தை பிடிக்க அடியாட்கள் முயன்று தோற்கும் போது இவனும் இந்தக் கதாசிரியரின் முன் நாவல்களில் ஒன்றான அமானுஷ்யன் கதாநாயகனின் அருகில் வருவானோ என்ற நினைப்பில் தொடர்ந்தால் இருவருமே வெவ்வேறு வார்ப்புகள்.

நேர்மை ஒன்றையே தெரிந்திருக்கும் தகப்பனை விவரமில்லாதவர் என்ற வட்டத்தில் அடைத்துவிட்டு தன் கனவை நனவாக்க புறப்பட்ட வசந்தத்தின் முன் பாதைகள் விரிவடைந்து கொண்டே போகிறது. தடைகளைக் கூட மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவன்.

திறமை ஒன்றையே மூலதனமாக்கி அமைச்சரின் வாரிசான சம்பத்தின் நம்பிக்கையைச் சம்பாதித்த நொடியிலிருந்து தன் வேலையைக் காட்டி மொத்த கறுப்பு பணத்தையும் காரிருளில் தள்ளிய வசந்த்தை பிடிக்கப் போராடும் சம்பத்தின் தேடுதலே கதையின் மையம்.

கெட்டவனிடம் இருந்து திருடுவதில் என்ன தவறு என்று கேட்டவனுக்குள் வந்த காதல் மனதை மாற்றியமைக்கும் நிகழ்வாகிறது. பணம் என்பதற்குப் போதும் என்ற சொல்லை சொல்லாதவனை அதைச் சொல்லவும் வைத்துவிடுகிறது.

கதாபாத்திர வடிவமைப்பின்படி கதையின் நகர்வு சராசரியான ஆளின் ஆசையைப் பூர்த்திச் செய்வதாகத் தான் அமையும் என்று எதிர்பார்த்தால் “முழுமையான கதாநாயகனாக” முடிவில் வசந்த் நின்றுவிடுகிறான்.

எவர்களிடமிருந்து எடுக்கப்பட்டதோ அவர்களிடமே வந்து சேர்கிறது.
41 reviews1 follower
August 16, 2020
Am amazing page turner. The strength is plot and not bothering with too much boring descriptions or lecturing . My first book written by N Ganesan and he is a modern writer respecting readers precious time. Well written and I completed the book in two sittings within a Sunday. Recommended read..
Profile Image for Saravanapiriyan K.
272 reviews3 followers
December 20, 2021
Superb novel. Very interesting novel.

I really enjoyed this novel from start to end. Story going in a rocket speed. Writer doesn't try anything cliche. Story has excellent flow. Very interesting novel.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.