பஞ்சமி நிலம் என்றால் என்ன? - அதன் பெயர்க்காரணம், வரலாறு மற்றும் இன்றைய நிலையை சுருக்கமாக, முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தமிழகத்தின் விவசாயம் என்ன, அதை யார் செய்தனர், எவ்வாறு செய்தனர், மற்றவர்களை ஏன் செய்ய விடவில்லை, எவ்வாறு தடுத்தனர், மிராசி என்றால் என்ன, பட்டாவிற்கும் நில உரிமைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றிய புரிதல் கிடைக்கும்.
இதில் தலித் இனத்தவரின் பங்கு என்ன, அவர்களுக்கு ஏன் நிலம் மறுக்கப்பட்டது, அதை அவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும், அதற்காக யார் போராடினார், எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டனர் என்ற கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் உள்ளது.
அவர்களுக்கு நிலம் யாரால் எங்கு கொடுக்கப்பட்டது, அதில் ஏற்ப்பட்ட சுரண்டல் பிடுங்கள் என்னென்ன, ஆங்கிலேய அரசு செய்த உதவி யாவை, அதற்கான காரணம் மற்றும் பலன்கள் என்ன என்பதையும் பல சம்பவங்களையும், புத்தகங்களையும் மேற்கோள் காட்டி விளக்கமாக எழுதியுள்ளார்.
வரலாறு குறித்து விளக்கமாக எழுதியுள்ளதைப்போல், இன்றை நிலையை விளக்கிக் கூறவில்லை. முக்கிய சட்டங்கள் என்ன அதன் பின்புலம் என்ன என்பதோடு நிறுத்திவிட்டு, மீதியை அரசுக்கு கேள்வியாக வைத்துள்ளார்.
தலைப்பை பற்றிய மேலோட்ட பார்வைக்கு இப்புத்தகம் பயன்படும்.