தமிழ்நாட்டில் திருப்பூர் என்பது முக்கியமான தொழில் நகரம். அந்நியச் செலாவணியை அதிக அளவு ஈட்டித்தரும் முக்கிய நகரம். படித்தவர்கள், படிக்காதவர்கள், முன் அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் ஏதோவொரு தொழில் வாய்ப்புகளைத் தரும் நகரம்.
திருப்பூருக்கு வந்தால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை ஊட்டிய இந்த நகரத்தில் நானும் 25 வருடங்களாக மேலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
கிராமத்து வாசியாக இருந்த நான் திருப்பூருக்குள் நுழைந்து ஊரின் படிப்படியான மாறுதல்களை உள்வாங்கியுள்ளேன். உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். திருப்பூரைப் பற்றியும், இங்குள்ள ஆயத்த ஆடை சார்ந்த தொழில் உலகத்தையும் பற்றி இந்தப்புத்தகத்