நந்தன் குறித்துச் சித்திரிக்கும் பல்வேறு கதைகளின் வழியாகத் தொழிற்பட்டுள்ள பண்பாட்டு அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் சாதி என்னும் படிநிலை அமைப்பைப் பாதுகாப்பதில் நந்தன் கதைகளுக்கு இருக்கும் பங்கையும், சாதிய பாகுபாட்டை எதிர்த்த அயோத்திதாசப் பண்டிதர் நந்தன் கதையைத் தலைகீழாக்கம் செய்ததையும் இந்த நூல் ஆராய்கிறது. அத்துடன், நந்தன் கதை மீண்டும் மீண்டும் பல்வேறு இலக்கிய / கலை வடிவங்களில் புத்துருவாக்கம் செய்யப்படுவதன் பின்னே சாதி அமைப்பை ஆதரிக்கும் / எதிர்க்கும் அரசியல் எவ்விதம் இயங்குகிறது என்பதையும் எடுத்துக்கூறுகிறது.தமிழ்நாட்டில் தீண்டாமை பரப்பப்பட்டதிலும், சாதி நிலை நிறுத்தப்பட்டதிலும் நந்தன் கதைகளுக்கு இருக்கும் பங்கை இந்நூல் ஆர