Jump to ratings and reviews
Rate this book

யூனிட்109: UNIT109

Rate this book
இது உங்களைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல. சொல்லப்போனால் இது கதையே அல்ல, முழு நிஜம். அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்? யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம் அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அது வரை பத்திரமாகவே இருங்கள். - பெக்கா.

266 pages, Kindle Edition

Published October 16, 2019

Loading...
Loading...

About the author

மாயா

13 books9 followers
Maya (Malarvizhi Baskaran) is a Tamil science fiction and historical fiction author.

She has written five science fiction novels including யூனிட்109 (Unit 109), which rose to popularity through Amazon's Pen to Publish contest and three historical novels, from கடாரம் (Kadaram) to பல்லவ காம்போஜம் (Pallava Kambojam).

She has written several sci-fi short stories including 'டைனோசர்’ an award-winning science fiction story. She has been noted as one of the few women writing science fiction in Tamil.

She writes across novels, short stories, and translations and publishes compelling videos on her YouTube channel authormaaya. Website: authormaya.com

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (68%)
4 stars
8 (18%)
3 stars
4 (9%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 7 of 7 reviews
2,121 reviews1,109 followers
November 2, 2019
மனிதகுலம் தோன்றியதிலிருந்து புனிதப்படுத்தி வைத்திருக்கும் ஓர் உறவுயென்றால் அது “தாய்” தான். இல்லையென்று சொல்லி மறுப்பு கருத்தை வைத்தாலும் அதற்கான வலுவை விட ஆம் என்று சொல்லும் கருத்துக்குக் காட்டப்படும் அர்ப்பணிப்புகள் அளவிடமுடியாதவை.

ஒரே வரியில் சொல்வது என்றால் ஆபத்தில் இருக்கும் மகனை தேடியடையத் தாய் ஈடுபடும் சாகசம் என்று சொல்லலாம்.

நாவல் என்ற பிம்பமே ஒருவரி கதையைச் சுற்றி எழுத்தாளர் பின்னும் மாயவலையில் வாசகர்களை கட்டிப்போட்டு தன் கற்பனையின் பக்கம் அவர்களை இழுத்தோ, அழைத்தோ செல்வது. அந்த வலை எவ்வளவு சுவாரசியமான காட்சிகளிலும் தரமான எழுத்துகளிலும் கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தான் மனதில் நிற்கும்.

முதலிலே சொல்லிவிடுகிறேன், சில பல உலகத் திரைப்படக் காட்சிகள் உங்கள் மனகண்ணில் வந்து போகலாம் இந்த நாவலை படிக்கும் போது, எனக்கும் தோன்றியது பிறகு யோசித்தால் கதைகளமே அதைத் தீர்மானித்தது என்ற முடிவை எட்டிவிட்டேன்.

ஈஷ்வர்....

பத்து வயது சிறுவன், அசாத்திய அறிவு அதுவே அவனை வெளியில் எவரிடமும் முதலில் பழகத் தடையாகிறது.

அந்நிய நாட்டின் களம். கதையை அறிவியல்பூர்வமாக அணுகவிடுகிறது.
எதிர்காலத்தில் இப்படி அப்படி என்று பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும் என்ற சாத்தியங்களைத் தினசரி கட்டுரைகளில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதை எட்டுவதற்கு அறிவியலாளர்களின் உழைப்பும் மறைமுகமாக அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளும் மக்களின் பார்வைகளில் விழுவதில்லை. அப்படி விழுந்தால் அதற்கான தடைகள் தான் முதலில் எழும்.

கிப்ட்டட் சைல்ட் என்று சொல்லப்படும் அசாதாரணத் தகுதியை கொண்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வர அதில் ஒருவனான ஈஷ்வரின் உடல் கிடைத்தாலும் அது தனது மகனே அல்ல என்ற தென்றலின் பிடிவாதம் மறைந்திருக்கும் கருப்பொருளை வெளிச்சத்தை நோக்கி இழுத்து வருகிறது.

பார்த்தவுடன் காதல், உடனடி திருமணம் அதன் தாக்கம் சில நாட்கள் மட்டுமே அடுத்துப் பிரிவு என்று வெகு குறுகியகாலத்திலே நடந்ததில் இருந்து தென்றலை மீட்டெடுக்கப் பிறந்த ஈஷ்வர் அவளுக்கு எல்லாமுமாகிறான்.

தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று அவன் காணாமல் போன அன்று தான் இன்பாவிற்குத் தெரிந்தாலும் தென்றலுக்குத் தேவையான மனோபலத்தை அளிக்கத் தவறவில்லை.

தனக்கு என்ன என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ஈஷ்வர், தன்னைத் தாய் தேடும் போது உதவுவதற்குத் தேவையான அனைத்து தடயங்களையும் அவளுக்கு விட்டு விட்டே மறைந்து போகிறான்.

தாய் மகனுக்குமான புரிதல்கள் வார்த்தைகளிலும், வார்த்தைகளின் இடைவெளியிலும் என்று நிரம்பி ததும்புவதும், அதன் வழியே தான் கதாபாத்திரங்களைப் புரிய வைக்கிறது.

இக்கதை ஒரு சார்பின் படி தான் நம்மை அழைத்துச் செல்கிறது. அது தென்றலின் பார்வையில். அதன் மறுபகுதிக்கு செல்ல டாக்டர் பெக்காவின் டைரியில் இருக்கும் வரிகளின் வழியே முதல் அத்தியாத்திற்கு முன்பே நுழைந்துவிடுகிறோம்.

மாபெரும் அதிகார சக்தியை எதிர்த்து போராட சிலபேரின் உதவிகளாவது தேவைப்படும் அப்படியாக ஷான் மற்றும் டேவ், இந்த இருவரும் தென்றலை ஈஷ்வரிடம் சென்று சேர வைக்கும் கதாபாத்திரங்கள்.

தலைப்பு ஏன் யூனிட் என்பதை டாக்டர் பெக்காவின் டைரி குறிப்பில் அறியலாம்.
Profile Image for Saravanan.
356 reviews19 followers
January 28, 2020
விறுவிறுப்பான கதை. ஆனால் Angular படிக்க TypeScript தெரிந்திருக்க வேண்டும் என்பது போல தமிழ் நாவல்கள்/கதைகள் படிக்க ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமா? ஒரு ஆங்கில எழுத்தாளர் தமிழ் நாட்டில் கதை நடப்பது போல எழுதினால் கூட இப்படி தமிழ் வார்த்தைகளை ஆங்கில எழுத்துக்களிலோ, மொழி பெயர்ப்பில்லாமல் அப்படியே தமிழ் வாக்கியங்களையோ பயன்படுத்துவாரா என்பது சந்தேகம்.

ஏன் நீங்கள் எல்லாம் "* தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்" என்று உங்கள் புத்தங்களில் சேர்க்கக் கூடாது?

எழுத்து, வாக்கிய பிழைகளுடன் படிப்பது எரிச்சலடையச் செய்வதால் 3.
1 review
November 15, 2019
Amazing

Interesting book. Futuristic thought. One of the rare science fiction novels in tamil. Read it in one full stretch. Cant keep it down without finishing. Keep your good work Maya.
1 review
December 9, 2019
Nice Sci-fi Thriller .


Enjoyed lot . spend my full night to complete the book. Excellent characterization , Narration , Flow of story , Suspense and Dialogue .


Dear amazon,

Is it possible to give 8 or 8/ 5 stars

Profile Image for Mo.
78 reviews6 followers
July 5, 2020
The novel kept me engaged until the end. But unfortunately, I was keep on thinking that this plot is inspired from "Stranger things" & "Impulse" kind of web-series! Yes, there are so many similarities. The end was very dramatic. However, it is a nice attempt for a Sci-Fi novel!
This entire review has been hidden because of spoilers.
2 reviews
November 12, 2022
Fantastic

தமிழில் சிறந்த சயின்ஸ் பிக்சன் நாவல்களில் இதுவும் ஒன்று என்று கட்டாயமாக சொல்லலாம். நாவலின் பல இடங்களில் சுஜாதாவின் எழுத்து நடையை நினைவுபடுத்துகிறது. நாவலின் இறுதி கட்டம் மட்டும் இன்னும் கொஞ்சம் டீடைலாக சொல்லி இருக்கலாம்.
Displaying 1 - 7 of 7 reviews