தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகம் கொண்ட வளமையான மரபினை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன என்று உறுதியாகக் கூறிட முடியும். - த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,
"தொல்லியல் அகழாய்வுகள் புதையலைத் தேடும் சிறு விளையாட்டல்ல. அது விடை தெரியாக் கேள்விகளுக்கான உண்மையைத் தேடும் தொடர் பயணம்"
கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் by தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை✨
இந்த தேடல்களின் காரணம் நம் வேர்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் வெளிப்பாடு அல்லவா?
நம் வம்சத்தின் மூலத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் போல் நமக்கு முன் வாழ்ந்தவர்கள் வாழ்க்கை முறை, நாம் கண்டறியாத முற்காலத்தின் அழகை அறிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலரிடம் இருக்கலாம். அந்த தேடல் தானே நம்மை வரலாற்று புதினங்களையும் சரித்திர காவியங்களையும் தேடிச்சென்று வாசிக்க வைக்கின்றது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் மதுரையின் வைகை நதிக்கரையில் இருந்து, மறைந்து, புதைந்த சங்க கால நாகரிகம் இன்று அகழ்ந்து நம் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மூலம்.
கீழடி அகழாய்வு கி.மு.ஆறாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதையும் அந்த காலகட்டத்திலலேயே நம் மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கிய உண்மையும் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது என்று வாசித்த போது உண்டான பெருமிதம் அந்த வைகை, கரை புரண்டு ஓடுவதை போல் மனதில் மகிழ்ச்சியும் கரைதாண்டி ஓடுகிறது.
அவர்களின் வாழ்க்கை முறை, தொழில், கட்டடக்கலை, பொழுதுபோக்குகள் போன்றவை பற்றிய பல விஷயங்கள் நமக்கு அறிந்து கொள்ள முடிகிறது.
கீழடி சென்று இந்த இடத்தை பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் இந்த புத்தகம் வாசித்த அனைவருக்கும் நிச்சயம் வரும்.
இந்தியாவிலுள்ள பழம்பெரும் நகரங்களுள் ஒன்று மதுரை. இந்நகரம் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தொடரும் பெருமை கொண்டது, பழம்பெரும் பண்பாட்டு மேன்மையினால் மதுரை நகரம் ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ என்று போற்றப்படுகிறது. • பொதுவாக ’சங்க காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று கருதப்பட்டுவந்தது. • அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாக காணப்படுகின்றன. • மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்ற கரிமத்தின் காலம் கி.மு 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது இக்காலக்கணிப்பின்படி கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத்தெரிகிறது • இதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. • எழுத்து பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதின் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது • தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், தற்போதைய கீழடி ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க கால வரலாறு காலத்தில் (Early Historic Period) கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. • தமிழகத்தில் 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் சங்ககாலத்தைச் சார்ந்த தமிழ்பிராமி எழுத்துப்பொறிக்கப்பட்ட 110 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களால் படித்தறியப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. • இதில் வரும் ”ஆதன்” என்ற பெயர் ”அதன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் முந்திய தமிழில் (தமிழ் பிராமியில்) உயிர்குறில் வடிவத்திலிருந்து உயிர்நெடிலை வேறுபடுத்திக் காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா.இராஜன் தமது Early Historic Writing System : A Journey from Graffiti to Brahmi என்ற நூலுல் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலை உயிர் எழுத்துக்களி மட்டுமே காணப்பபடுகிறது. எனவே, கீழடி தமிழி (தமிழ்பிராமி) எழுத்து பொறிப்புகள் காலத்தால் முந்தியவை என்பதை நமகு உணர்த்துகின்றன. • சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் ஒவ்வொரு ஆறும் கடலில் கலக்கும் இடங்களில் மிகப் பெரிய துறைமுகங்களும் ஏனைய பகுதிகளில் சிறிய துறைமுகமும் சிறப்புற்றிருந்தன. பாலாறு கடலில் கலக்கும் இடமான வசவ சமுத்திரம், காவேரி கடலில் கலக்கும் இடமான பூம்புகார், வைகை கடலில் கலக்கும் அழகன்குளம், தாமிரபரணி கடலில் கலக்கும் கொற்கை போன்றவை சிறந்த துறைமுகங்களாக விளங்கின.
This entire review has been hidden because of spoilers.
தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையின் சீரிய முயற்சியின் பயனாய் விளைந்த நூல் இது. தமிழ் உணர்வுள்ள ஒருவரும் அவசியம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் உள்ள நூல் இது. படிப்போம்! பயனடைவோம்!