அண்ணாவிடம் ஒரு மிக பெரிய கனவு இருந்தது அது தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்றும் மாபெரும் கனவு
“பணத்தோட்டம்” எழுதும்போது அனேகமாக அண்ணா பெரியாரை விட்டு பிரியவில்லை என்பதும் இந்திய சுதந்திரம் பெற்ற பின் எழுதப்பட்டதாகவும் தெரிகிறது.
அண்ணாவின் பொருளாதார சிந்தனையும் சீர்திருத்தமும் மக்கள் நலன் சார்ந்திருந்தது என்பதற்கு இந்நூல் மிகப்பெரிய சாட்சி
1947-1949 களில் பம்பாய் மாகாணம், மெட்ராஸ் மாகாணத்தை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கு நிறைய பண புழக்கம் இருந்த காரணத்தினால் நிறைய நூல் ஆலைகள், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவில் வளர்ந்து வந்த காலம். தமிழகத்தில் “கைத்தறி ராட்டையில் கதர் செயுங்கள்” என்ற பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சி காரர்களால் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது.
வடநாட்டு பொருளாதாரத்தை தான் அண்ணா “பணத்தோட்டம்” என்று குறிப்பிடுகிறார். அப்போதுள்ள பிரதமர் நேருவிடமும் தமிழக காங்கிரஸாரிடமும் கேள்விகளை அடுக்கியுள்ளார் பேரறிஞர்.
“விமான துறை வளர்ச்சி அடைந்து வருகிறது பிறகு ஏன் அதை அரசு நடத்தாமல் தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கவேண்டும்? அரசே எடுத்து நடத்தலாமே என்றும். சோசலிசம் பேசும் நம் நாடு பிரதமர் இதை பற்றி பேசாமலிருப்பது ஏன்” என்ற குரல் அண்ணாவின் பொருளாதார பார்வைக்கு ஒரு சான்று. “இதை தாண்டி சொந்த நாடு மக்கள் பிழைப்பு தேடி அயல்நாட்டிற்கு செல்லும் இந்த காலத்தில் அரசு போருக்காகவும் முதலாளித்துவ நலனுக்காகவும் கோடிகளில் செலவுசெய்வது நியாயமா” என்றும் கேள்விகளை தொடுத்திருப்பர்.
இதை எல்லாம் தாண்டி அண்ணாவின் மொழி வளமும், இலக்கிய நயமும் ஆடம்பரமானது. அந்த ஆடம்பரம் அம்பேத்கர் அணிந்த கோட்-சூட் போன்றது. காரணம் இரண்டிற்கும் ஒன்று தான்.
அண்ணாவின் பொருளாதார பார்வையை புரிந்து கொள்ள இந்நூல் ஒரு சிறு சான்று. அந்த பொருளாதார பார்வையில் திராவிட நாடு என்ற பெருங்கனவு இருந்தது, இன்றும் அந்த பொருளாதார பார்வை நமக்கு தேவை படுகிறது.
தோழர்கள் அனைவரும் இந்நூலை வாசித்து புரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.
அண்ணா வாழ்க
திராவிடம் வளர்க