சாதியக் காரணமா காட்டி நிறைய பணக்காரர்கள்தான் இந்த இடவொதுக்கீட்டால பயனடையுறாங்க. நம்ம நாட்ட பாருங்க, இடவொதுக்கீடு ஏழைகளுக்கு உதவவே இல்ல. திறமையே இல்லாதவங்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கிது, இப்படி இருந்தா எப்படி இந்தியா முன்னேறும்? தீண்டாமை சாதியெல்லாம் பழைய கதை, இன்னுமும் அதையே பேசிகிட்டிருந்தா நாம வளரவே முடியாது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுகீட்டை பற்றிய பொய்களையும், தவறான கண்ணோட்டத்தில் காண்பதையும்சுருக்கி விளக்கியுள்ளார்.
இடஒதுக்கீடு ஏன் அவசியம்? எங்கெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படும்? இடஒதுக்கீடு இல்லையென்றால் சமூகத்தின் வளர்ச்சியில் நடக்கும் பாதிப்புகள் என்று விளக்கியுள்ளார்
வெறும் ஏழு பக்கத்தில் மிக பெரிய சமூக பிரச்னையை சொல்லியிருப்பது ஒரு குறையாக மட்டுமே பார்க்கமுடிகிறது. இடஒதுக்கீட்டை பற்றி விரிவான நீண்ட வரலாறு படிப்பது அவசியம்