ஆயுதப்போராட்டங்கள் குறித்த அவநம்பிக்கை சூழ்ந்திருக்கும் காலம் இது. சர்வாதிகாரிகள் ஜனநாயக உரையாடலின் நுட்பங்களைக் களவாடித் தம்மை நாகரீகமானவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கும் சூழல். அதனால்தானோ என்னவோ இப்போது லத்தீன் அமெரிக்க படைப்புகளைப்பற்றிய ஆர்வம் நம்மிடையே குறைந்துபோயிருக்கிறது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸும், மரியோ வர்கஸ் லோசாவும், இஸபெல் அலெண்டெவும், கொர்த்தஸாரும் இன்னும் பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களும் நமது சக எழுத்தாளர்கள் போலக் கருதப்பட்டு விவாதிக்கப்பட்டனர். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவர்களது படைப்புகள் இங்கு கோலோச்சிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களு&