எழுத்து, அதாவது இலக்கியம் என்பது மிகவும் உயர்ந்த முயற்சியாகும். அதிலே, 'கன்னாப் பின்னா மன்னார் கோவில்' சங்கதிகளைப் புகுத்தி, அதன் கௌரவத்தைக் குறைப்பது, அதற்கு துரோகம் செய்வதாகும். மனிதன் தெய்வத்தன்மை அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். தெய்வத்தன்மை மனிதனுக்குள்ளே இருக்கிறது. அதை சோபிக்கச் செய்வது தான் இலக்கியத்தின் கடமையாகும். அதற்கான முறைகளிலே தான் எழுத்தைச் சித்திரித்துக் கொண்டு போக வேண்டும். அற்ப விஷயங்களையும் சில்லறைத் தகராறுகளையும் பற்றி எழுத்தில் எதிர்பார்ப்பது, இலக்கியத்தை புண்படுத்துவதாகும்..'
- வ.ரா.வின் இலக்கிய சித்தாந்தம் -
To order a book, please contact this number : 91-9841450437 Email : bodhivanam@gmail.com