சிறுகதைகளுடன் இது வரை எனக்கிருந்த பரிச்சயம் வாசித்தல் மட்டுமே. அகவை அறுபதில் எழுந்த ஆர்வக் கோளாறின் வெளிப்பாடு ஐம்பது சிறுகதைகளாக உருப்பெற்றது. என்னுடய நண்பர்களின் ஊக்குவிப்பினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. நுண்ணுயிரியல் முதுகலைப்பட்டம் பெற்று, பல நாடுகளில் வசித்த அனுபவமும், சிறப்பு தேவை வேண்டும் ஒரு சில குழந்தைகளின் வாழ்வில் முக்கிய பங்காற்றியதும் எனக்குக் கிடைத்த வரம்.. முதல் மற்றும் கடைசி சிறுகதைகள் எனது தாய் தந்தையரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது என்பது கூடுதல் தகவல்.