எனது மூன்றாம் கதை... எனது முதல் கதையான "உன்னுள் நான்.. என்னுள் நீ.." கதையின் இரண்டாம் பாகமே இக்கதை. இறுதி நான்கு அல்லது ஐந்து பாகங்கள் மட்டுமே வந்த யுகேந்திரன் - இனியாவின் காதல் கதை. அதனால் இக்கதை முழுவதும் அவர்களின் காதலின் ஊடல் கூடலை முழுமையாக கூறுவதே. தன் காதலுக்காய் தன் காதலனிடமே போராடிய ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான காதல் கதை. சுட்டெரிக்கும் வெயிலாய் இருப்பவன் யுகேந்திரன்.... தென்றலாய் இதம் அளிப்பவள் கண்ணிக்கினியாள் என்ற இனியா - கிராமத்து பைங்கிளி.... ஆஸ்திரேலியாவில் சிறந்த தொழிலதிபராக இருப்பவன் யுகேந்திரன்... தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஒரு அழகான பூஞ்சோலை கிராமத்தில் இருப்பவள் இனியா... இருவேறு துருவங்கள் எவ்வாறு இணைகின்றன என்பதே இக்கதை..