அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. பெற்றவர்கள் இல்லாமல் வளரும் நாயகன்., அவன் வேலை மற்ற எந்த விபரமும் தெரியாமல் திருமணம் செய்யும் நாயகி... நாயகி பற்றியும் எதுவும் அறியாமல் திருமணம் செய்து கொள்ளும் நாயகன்... அவர்களுக்கான அன்பு அந்நியோன்னியம்.., குடும்பத்தில் பிரச்சனை உருவாக்கும் சொந்தம்... நட்பின் ஆழம் இவை தான் இந்தக் கதையின் சாராம்சம்... நட்புகள் எவ்வாறு கடைசிவரை துணைபுரிகிறது என்றும்., ஒரு மனைவியாக கணவன் மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாயகி பொழியும் அன்பையும் சொல்வதே கதை...