அறிந்த முகங்களான் தாய் தந்தையரின் அறியாத முகங்களை பார்க்க நேரும் ஓர் இரவைப் பற்றிய கதை.
***
இந்தக் கதையை பெல்ஸ் ரோடிலிருந்த கணையாழி அலுவலகத்தில் கஸ்தூரி ரங்கனைடம் கொடுத்தேன். கைகளில் வாங்கியவர் அப்படியே படிக்கத் தொடங்கினார். படித்து முடித்ததும் ம். இந்த இஷ்யூலையே போட்டுடலாம் என்றார்.
விடைபெற்றுக் கிளம்புகையில், வெளிலதானே சாப்பிடப்போறேள் என்றார்.
ஆமாம்
இன்னைக்கு என்னோட வாங்கோ, என்று அவரது காரில் இப்போதைய உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு அடுத்திருக்கும் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.