முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது. சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது. அபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன் பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது.
1970 - 80 களில் சவுதி / துபாய் செல்வதற்காக பம்பாய் சென்று பல நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் தங்கி பயணம் சென்றவர்களின் கதைகளையும் கையிலிருந்த காசையெல்லாம் செலவழித்து விட்டு வெறுங்கையுடன் ஊருக்குத் திரும்பியவர்களின் கதைகளையும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது போன்றதொரு கதையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அண்ணன் Abul Kalam Azad.
பயணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பல தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இதை கதை அல்லது நாவல் என்பதை விட ஒரு வரலாற்றுக் குறிப்பு என்று கூட கூறலாம்.
பன்முகத்திறமை உடைய அண்ணன் Abul Kalam Azad அவர்கள் மேலும் நிறைய எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
பதினேழு வருடங்களாகிறது TCS நிறுவனத்தின் வழியாக அமெரிக்கா வந்து, அரபு நாடுகளுக்கு என்பதுகளில் சென்றவர்களுக்கும், 2000ங்களில் அமெரிக்கா சென்றவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. கிட்டதிட்ட இருதலைமுறைகளும் பின்னால் இந்த இருநாடுகளிலும் மிக பெரிய அளவில் தமிழகத்திலிருந்து இடப்பெயர்வு நிகழ்ந்தது. சூழ்நிலைகளும் ஒருவாறு அப்படியே, சிலகாலம் சம்பாதித்துவிட்டு, தங்கையின் திருமணம் முடித்துவிட்டு, வீடு கட்டிவிட்டு என்று காரணங்களோடு வந்து திருப்பிவிட நினைத்தாலும் முடிவதில்லை. அன்றைய ஆரிப் பாஷாவின் கதையில் இந்த ஆறுமுகத்தின் வாழ்க்கையும் சேர்த்து பார்ப்பதுபோலிருந்தது. இறுதியில் பாஷா இயக்குனராக இருக்கிறார் என்று படித்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தை விவரிக்கமுடியாது.
The story is mesmerizing by portraying life if Gulf in the middle of 1980s. The hero Basha and his progress towards success might give enthusiasm to most of the young readers.