Tamil Romance Novelகடவுளின் அருளால் “வராது வந்த நாயகன்” எனும் புத்தம்புது நாவலை என்னுடைய பதினைந்தாவது நாவலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியலில் நிலவும் இன்றைய அலட்சியப்போக்கை மாற்றி அமைக்க நாம் வாழும் சமூகத்தில் இருந்து ஒரு சிறந்த அரசியல் தலைவன் (நோ... இவன் தொண்டன் தான் ஆனாலும் தலைவன் தான்) உருவானால் எப்படியிருக்கும் என்கிற எனது அடுத்த கற்பனை.பள்ளி தோழனாக, தேர்ந்த அரசியல்வாதியாக, காதல் கணவனாக என்று என்னால் ரசித்து உருவாக்கப்பட்ட நாயகன். இவனை போன்று ஒருவன் நிஜத்தில் வர வேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டு வடிவமைத்த கதாப்பாத்திரம்.