தேவ்ராஜ் - ஆர்ப்பரிக்கும் ஆழி அவன். இரக்கமற்ற அரக்கன், அகங்காரன். கோபம் அவன் குணம். வணிகம் அவன் வாழ்க்கை. கர்வம் அவன் கெளரவம். அவள் தாங்குவாளா? மதுரா - அழகிய ஆம்பல் மலர் அவள். கனிந்த இதயம் கொண்டவள். பயம் அவள் குணம். பாசம் அவள் வாழ்க்கை. காதல் அவள் கனவு. அவன் போற்றுவானா?` சாதாரண கதை. நிகழ்வுகளின் கோர்வை. ஆனால் பல இடங்களில் உங்கள் நெஞ்சை உலுக்கும். காதலை உணர வைக்கும். கண்ணீரில் கரைய வைக்கும். இறுதியில் இதழ்களில் புண் முறுவலையும், நெஞ்சத்தில் நிறைவையும், சிறந்த வாசிப்பு அனுபவத்தையும் தரும் இந்த தீவிர காதல்... தீரா காதல்... கனல்விழி காதல்.