Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.
சில வாரங்கள் முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பரிந்துரைத்த சிறுகதை இது. மிகவும் அருமையான ஒரு சிறுகதை. வெறும் இருபது பக்கங்கள் கொண்டிருந்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து செல்ல முடியவில்லை.மனிதர்களின் இயலாமையை நேர்த்தியாக வெளிக்காட்டுகிறது. நொறுங்கிகொண்டு இருக்கும் குடும்பத்தை தாங்கி நிற்கும் நெடுந்தூண் தான் எஸ்தர். எஸ்தர் என்ற பெண்மணியின் வலிமையை உணர்த்துகிறார் எழுத்தாளர். பாட்டி, எஸ்தர் சித்தி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறைகளின் விம்மல்களை இத்தனை பக்கங்களினுள் அடக்கியது அறுபுதம். முதல் ஐந்து பக்கங்கள் வேகமாக சென்றன. பிறகு மனதிற்குள் ஏதோ ஒரு பாரம். வாசிப்பு மெல்லவே சென்றது. நீர் இல்லாத ஒரு நிலத்தை பற்றி வாசிக்கையில் என்னவென்று தெரியாத ஒரு படபடப்பு. இவ்வுலகில் மனிதர்கள் எவ்வளவு சின்ன புள்ளிகள் என்று உணர்த்துகிறார் வண்ணநிலவன். அனைவராலும் கண்டிப்பாக வாசிக்கப்படவேண்டிய ஒரு சிறுகதை இந்த 'எஸ்தர்'.
'கடல்புரத்தில்' எனும் நாவல் மூலம் தான் வண்ணநிலவன் அறிமுகம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல் அறிமுகப்படுத்திய நாவல் 'எஸ்தர்'. அட வண்ணநிலவனின் நாவல்!. என்று வாங்கி படித்தேன். 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
அதில் எஸ்தர் கதை என்னை மிகவும் பாதித்து விட்டது. எஸ்தர் சித்தி கதாபாத்திரம் சில நேரங்களில் என் தாயின் முகத்தை என் முன் கொண்டு வந்து நிறுத்தியது. காரணம் எங்களை வளர்க்க அவள் பட்ட கஷ்டம் தான்.
ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் - பஞ்சம், வறட்சியின் காரணமாக பிழைக்க வழியில்லாமல் இடம்பெயர்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் மட்டும் இருக்கிறது. அவர்களின் கதை பற்றியது தான் எஸ்தர்.
ஒரு 12 பக்க சிறுகதை என்னை வாட்டி எடுத்து விட்டது. Please do read it.
இது ஒரு அற்புதமான படைப்பு. நான் மேலோட்டமாக கதைகளை படிக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. ஏனெனில் சிறுகதை தானே என்று இந்த கதையை அணுகி விட முடியாது. அத்தனை ஆழம் கொண்டு மனதில் பாரம் ஏற்றுகிறது. 23 பக்கங்களில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மையும் உணர வைப்பதால் இது கூடுதல் பாராட்டுக்கள் பெறுகிறது.
This is a one of a kind short story. This book made me realise that I am not reading deep enough between the lines. Had to read certain parts for a second time to actually understand the crux. A beautiful story that leaves you with a heaving heart.
இது வண்ணநிலவன் அவர்களின் நான் வாசிக்கும் முதலாவது புத்தகம். 1976ல் வெளிவந்த 17 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு தான் இந்த எஸ்தர். இந்த சிறுகதைகள், ஆங்கிலத்தில் Neo- noir என்ற சொல்லாடலை திரைப்படத்திற்கு பயன்படுத்துவார்கள், அந்த வகையைச் சேர்ந்ததாக உணர்கிறேன். மக்களின் வாழ்க்கையின் கருப்புப்பங்களை எடுத்துக்காட்டுவதே Neo- noir என்பார்கள். அனைத்துக் கதைகளும் மிக உயிரோட்டமாக, ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக தோன்றியது. ஒரு கதையின் முடிவு அடுத்தக்கதையின் தொடக்கமாக உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.வெவ்வேறு குடும்பங்களின் மிகக்கொடிய வறுமையால் பின்னிப்பிணைந்த துன்பங்களையும் இன்னல்களையும் நேர்த்தியாக, கதைமாந்தர்கள் ஏதோ நம்மிடம் உரையாடுவதைப் போல படைத்துள்ளார் குறிப்பாக எஸ்தர் சித்தியும் ஈசாக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரு. கமல் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்களுள் ஒன்று. படைப்பாளியின் படைப்புத்திறனை என்னவென்று பாராட்ட.. ஒரு வித கனமான இதயத்துடன் !! அவரின் மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
வாழ்க்கையின் வறுமையை, வருமை தரும் சோகங்களை, வாழ்க்கையின் யதார்த்தத்தை அதை மீறிய வாழ்க்கையின் முடிவில்லா எதிர்பார்ப்புகளை, அந்த எதிர்பார்ப்புகளின் சந்தோஷங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகிறது.
ஒவ்வொரு கதையிலும் எத்தனை கதைமாந்தர்கள் எத்தனை குடும்பங்கள் எத்தனை வாழ்க்கை முறைகள் படிக்கப் படிக்க பெருகிக் கொண்டே வருகிறது, தோண்ட தோண்ட கிடைக்கின்ற தங்கம்போல்.
இந்தத் தங்கப் புதையலிலும் சில வைரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எஸ்தர், யுக தர்மம், அயோத்தி, அவனூர், கரையும் உருவங்கள் இவையெல்லாம் நான் கண்ட வைரங்களே. உங்களுக்கு இது முழுவதும் வைரமாக கூட இருக்கலாம்.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பானவை ஆகும். எல்லாம் சிறிய கதைகளாகவே இருக்கின்றன ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் மனதைவிட்டு நெடுநேரத்திற்கு போக மறுக்கிறது.
எஸ்தர் கதையில் வரும் எஸ்தர் எல்லா வீடுகளிலும் இருப்பதாக எனக்குப் படுகிறது. பள்ளி நாட்களில் துணைப் பாடப் பகுதியில் படித்த கரையும் உருவங்களை மறுபடியும் படிக்கையிலும் கண்கள் கண்ணீர் விட மறுக்கவில்லை. ஆகமம் என்னும் கதையை மிகவும் நுட்பமான பார்க்கிறேன். வெளிச்சம் யுகதர்மம் விமோசனம் மனைவி போன்ற அனைத்து கதைகளும் ஏதோ ஒரு வகையில் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
Unpopular opinion : Every story is based on neo-noir type..... Not even a single story don't disappoint you 💯. One of the best short story collection 👌...... Can't choose which is your favorite story ..
Cried in the end. The value of a person decreases over time and this book is about the person also who you don't see that often in the story and doesn't even talk a single word in the entire book. You can feel like you are living in the abandoned village feeling the suffering of the small family struggling with limited resources
Ester - alludes women'ism. gracefully contours three distinct age group women's out cast about the life. The story breezes through individual characters with a high dope ending.
Story backdrop set in a village called "Sathankulam/சாத்தாங்குளம்" Ramanathapuram district Tamilnadu.
The District is known for a dry weather and famine landscape. besides Sathankulam transcribes as DevilTown as like the haunting storyline.
This book is the deep explanation of a famine in a family. Every lines depicts the sadness and the long lasting sorrow of a family. It contains only few pages which explains their sorrow deeply. A tiny hope presents with them in their difficult time too. It reminds the quote "it's okay if all you did today was survived".This book also reminds me k.balachandar sir's thaneer movie.