" என்னோட கன்சென்ட் இல்லாம என்னை மேரேஜ் பண்ணவனெல்லாம் என்னால ஹஸ்பெண்டா நெனைக்க முடியாது மேடம்" என்று கடுப்பாக கூறினாள் அவந்திகா.
"இங்க பாருங்க மிசஸ்.அவந்திகா கபூர், இப்போ நீங்க மிஸ்டர் ராகவ் கபூரோட லீகல் வைஃப் . அப்பிடி நீங்க அவர் கூட வாழ விரும்பலைனா யூ கேன் அப்ளை ஃபார் டிவோர்ஸ். பட் இப்படி அவர் கூட வாழ விரும்பலைனு அடம் பிடிச்சு எங்க டைமை வேஸ்ட் பண்ணாதிங்க. ப்ளீஸ் லீவ் இட் நவ்" என்று இன்ஸ்பெக்டர் கூறவும் அவந்திகா கோபத்துடன் ராகவை முறைத்தாள்.
அவனோ "நாளைக்கு நீ என்னோட வீட்டுக்கு வருவனு எதிர்ப்பாக்குறேன், பை டியர்" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் காரில் ஏறிச் சென்றான்.
விரும்பியோ விரும்பாமலோ திருமண வாழ்வு தனிப்பட்ட மனிதர்களின் குணத்தை மாற்றித் தான் விடுகிறது. அவர்களின் சரிபாதியாக வருபவர்களின் குணத்தின் சார்பிலே அம்மாற்றமும் அமைந்துவிடுகிறது.
தன் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் சமாதானம் ஆகும்வரை ஓயாமல் அதே சிந்தனையில் இருக்கும் ராகவ், தன் சுயமரியாதையை இழக்கும் ஒரு சொல்லைக் கூட விரும்பாத அவந்திகா என்ற இரு திசைகளில் தனித்துப் பறந்தவர்களைத் திருமணம் என்ற சடங்கு ஒரே பாதையில் செலுத்தும் கதை.
தன் தோழியின் திருமணத்திற்கு வந்த அவந்திகா அந்த சம்பிரதாயங்கள் முடிவதற்கு முன்பே மாப்பிள்ளையின் தம்பிக்கு மனைவியாகிறாள். தொழில் போட்டியால் ராகவை வீழ்த்த எய்த அம்பில் அவந்திகா அகப்பட தன்னால் ஒரு பெண் பாதிக்கப்படுவாளோ என்ற பதட்டத்தில் அவளை மணந்தவன் காதல் கணவனாக மாறத் தேவைப்படும் நேரத்தை எடுத்துக் கொள்கிறான். இங்கே தான் கவனத்தில் தெரிந்து கொண்டது எழுத்தாளரின் மனப்போக்கை. முழுவதும் நேர்மறை மனிதர்களும் அவர்களின் செய்கைகளும் தான் கட்டாயம் என்பதைக் காதலாக மாற்றியது.
மூன்று காதல் ஜோடிகள் அவர்களின் திருமண வாழ்வு என்று செல்கிறது. கூட்டுக் குடும்பம் கபூர் குடும்பமாகப் போனதால் சென்டிமெண்ட் கண்ணில் படவில்லை. இந்தி சீரியல்களின் தாக்கத்தை உணர முடிந்தது. வலிந்து திணிக்கப்படாத காதல் காட்சிகள் இல்லாததற்கு பாராட்டப்படவேண்டும்.
இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணி இருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.