“2015 இல் புத்தகமாக வெளிவந்த என்னுடைய முதல் நாவல்” தனிக் குடும்பமாக வாழும் குடும்பத்தில் இருந்து வரும் நாயகி கூட்டுக்குடும்ப வாழ்க்கை விரும்புகிறாள். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் நாயகன் தன் குடும்பம் குலையாமல் காக்கும் மணமகளை தேடுகிறான். எப்படி இவர்களுடைய வாழ்க்கை சேருகிறது என்றும்., திருமணம் என்று வந்தாலே பிரிக்க துடிக்கும் மக்கள் இருப்பார்கள்., அவர்களிடம் இருந்து எப்படி மீண்டு வந்து திருமணம் நடந்து அந்த குடும்பம் மகிழ்ச்சியை தொடுகிறது என்பதும் இக்கதையில் சொல்லியிருக்கிறேன்.., கூட்டுக்குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானது என்பதை தெளிய வைக்கவே கதை..