Jump to ratings and reviews
Rate this book

சேது நாட்டு வேங்கை [Sethu Naattu Vengai]

Rate this book
தமிழ் வரலாற்றுப் புதினம்

400 pages, Paperback

First published January 1, 2007

6 people are currently reading
74 people want to read

About the author

Indra Soundar Rajan

310 books382 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (18%)
4 stars
8 (50%)
3 stars
4 (25%)
2 stars
1 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
254 reviews34 followers
December 19, 2025
புத்தகம்: சேதுநாட்டு வேங்கை
எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன்
பதிப்பகம்: திருமகள் நிலையம்
பக்கங்கள்: 400

💥 இதுவரை வாசித்த புத்தகங்களில் இது வேறுபட்ட ஒன்று. மதுரையை ஆண்டு வரும் சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்கு பெரிய ஆபத்து வந்தது. மதுரையில் இருக்கும் மந்திரிகள் மூலம் சேதுநாட்டுக்கு செய்தி போனது.

💥 பகையை விட்டு சேதுநாட்டு மன்னர் , மதுரையை காப்பாற்ற முடிவு செய்கிறார். தனது பெரும் படையுடன் வந்து குதிரைக்காரனை வீழ்த்தினார் . நாயக்கர் அவர்களுக்கும் சேதுபதிக்கும் ஒரு நட்பு உருவானது.


💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - பன்னிரண்டாவது புத்தகம் இது.

💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,

பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Arun A.
59 reviews10 followers
January 18, 2019
கிழவன் சேதுபதி ஆட்சி காலத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் தான் சேது நாடு வேங்கை. சீதக்காதி (சையது காதர்), சொக்கநாத நாயக்கர், மங்கம்மா, முத்துலிங்க நாயக்கர், இளந்தாரி அம்பலம், சோளகை சேர்வைக்காரன், குமராப்பிள்ளை, தளவாய் கோவிந்தப்பய்யா, வேங்கட கிருஷ்ணப்பர், ருஸ்தமகான் சாஹிப், தாதியதேவர், கையூம் மற்றும் சில முக்கியமான கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட நாவல்.

நாயர்க்கர் ஆட்சிக்காலங்களில் பாளையங்களாக பிரிக்கப்பட்ட போதிலும், தன்னாட்சி நடத்திவரும் கிழவன் சேதுபதி, அத்தனை காழ்புணர்ச்சிகளுக்கு மத்தியிலும், சொக்கநாத நாயக்கருக்கு தக்க சமயத்தில் உதவி புரிந்து, மதுரையில் நடக்கும் ஆட்சியை முறைப்படித்தி, மைசூர் படையெடுப்பையும் தடுத்து பெரும் உதவி செய்கிறார்.

சொக்கநாத நாயக்கருக்கும், கிழவனுக்கும் இடையே இருந்த மானசீக நட்பானது, முதலில் குதிரைக்காரன் ருஸ்தம்கானின் சூழ்ச்சியால் மதுரையை ஆளும் நிலைமையில் பிளவுபடவும், மீண்டும் கிழவன் ருஸ்தம்கானிடமிருந்து மதுரையை மீட்டு நாயக்கருக்கு கொடுக்கும் போது துளிர்விடும். ஆனால் மீண்டும் மங்கம்மாவின் கௌரவ பிரச்சனையால் மகன் முத்துலிங்கம், மற்றும் கிழவனின் தமையன் தாதியதேவரோட இணைந்து நிகழும் சூழ்ச்சியால் மீண்டும் பிளவுபடும். இறுதியில் சொக்கநாத நாயக்கரின் மரணத்தில் அவர்களின் நட்பு முழுமையடையும்.

வரலாறு தழுவி வரும் இந்த நாவல், கதையில் மட்டும் கருத்தாக நகரும். கொஞ்சம் காதல், வீரம், நட்பு, ஒழுக்கம், ஈகை இப்படி பலவிதமான உணர்வகளை உள்ளடக்கியது.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.