தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் ,வைகை நாகரிகம், திராவிட நாகரிகம் என்று பல விதங்களில் தற்போதைய அகழாய்வு செய்திகள் நம்மை தொல்லியல் நோக்கி ஈர்க்கத்தொடங்கியிருக்கிறது. தொல்லியல் துறைசார்ந்தவர்கள் என்று மட்டுமில்லாமல் துறை சாராத ,அதே நேரம் வரலாற்றின் மேல் ஆர்வமுள்ள அனைத்து ஆர்வலர்களுக்கும் இந்த புத்தகம் ஒரு அறிமுகத்தை தொல்லியல் துறையை நோக்கி கவனம் கொள்ள வைக்கும். கிமு 300 களில் மூச்சடைத்துக்கொண்டிருந்த தமிழ்மொழியின் வரலாறு கிமு 600 க்கு வந்திருப்பது நாம் அறிந்திருப்போம். அந்த கிமு 600 களில் ஏன் நிற்கிறது? சிலை கடத்தலில் இருக்கும் பிறவிசயங்கள் என்ன ? அதனைச் செய்யும் அரசியல் பார்வைகள் என ஒரு கற்பனைக்கதை தான் இந்த மின்னூல் . நன்றி ஆசிரியர்.
சிறப்பான கட்டுரை, தமிழ் ஆர்வலர்களுக்கு பரிந்துரைக்கலாம். பல புதிய திறப்புக்கு வழி செய்கிறது. வாழ்த்துக்கள்
ஆசிரியரைப்பற்றிய குறிப்பில் கூறப்படுவது, கற்பனையா அல்லது நிஜமா என அறிவதில் குழப்பம் ஏற்படுகிறது. மற்றப்படி பல புதிய தகவல்களை அறியக்கூடியதாய் இருக்கிறது.