வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச்சூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருடக் கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது. இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்துக்களில் இதுவும் ஒன்று. பொதுவாக மேலாண்மை நூல்கள் தமிழில் பல நூறு உள்ளன. ஆனால், அவற்றில் எதுவும் இது போல ஒரு நமக்கெல்லாம் தெரிந்த ஊரில், அதன் பெயர்பெற்ற குறிப்பிட்ட தொழில் மூலமாக தெளிவாக அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பகுத்து, அதில் நாளும் நடக்கும், நல்லது கெட்டது மூலமாக, அதில் பங்குபெற்ற உதாரணங்கள் மூலமாக, விரிவாக இதுபோல் அலாசி, விளக்கமளிததில்லை. சில இடங்களில் சற்று தடம்மாறி, எழுதியவரின் சொந்த தன்மையையும் அனுபவ பாடங்களையும் சொல்ல வெகு நேரம் எடுத்துக்கொள்வதால், சொல்லும் விஷயத்தில் சற்று தொய்வு ஏற்படுவது தவிர்க்க முடியாது. இருந்தாலும் அவர் சொல்லும் கருத்தின் தன்மையையும், ஆழத்தையும் கருதி அதை கடந்து போகலாம். ஆனாலும் அதனால் சலிப்பு ஏற்பட்டு சில வரிகளைத் தாண்டி போகவேண்டுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த நிலையில், திரும்பவும் ஒரு வாசிப்பு தேவைப்படக்கூடும்.
Travelogue on contemporary Tirupur garment factories
Readers can get both technical and management knowledge apparently when go through this book. His approach on man management maybe suited for entire industry , where human labour needs are more. What "My experiments with truth" is treated among biographies, these book also treated among books on contemporary management skills. Well narrated.