உண்மையில்லா புனைவும், புனைவில்லா உண்மையும் சுவாரசியமாக இருப்பதில்லை என யாரோ சொல்லியிருக்கிறார்கள் .... அதற்கெற்ப சில உண்மைகளும், பல புனைவுகளும் சேர்ந்ததே இந்த கதைகள்
ஆனந்த விகடனில் வெளியாகும் சிறுகதைகளில் ஆன்மா இருப்பதை உணர முடியும். கதை முடிவில் ஒரு மென்மையான அழுத்தத்தை மனதில் தோற்றுவிக்கும் அதே தாக்கத்தைத் தான் இதில் இருக்கும் முதல் கதை கொடுத்தது.
இணையாத காதலர்களாலே காதலின் மாயசுழல் மீண்டும் மீண்டும் உலாவருகின்றது.
நான்சி - மறக்க முடியாத அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியவரை பல வருடங்கள் கழித்து பார்க்கும்போதும் கேள்விகள் ஏதுமின்றி பெரிது படுத்தாமல் இயல்பாக கடந்து செல்லும் முற்போக்கான பெண். காதல், சாதி, துரோகத்தால் கலந்த கதை.
எழுத்தாளன் - கதைக்குள் கதை, கதையைத் தேடி ஒரு கதை. பொதுவாக வாலிப பருவத்தில் பல நண்பர்கள் கூட்டத்தில் நடந்திருக்கும் இயல்பான கதை.