அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்கர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பதற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள். தங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறினார் பிடல் காஸ்ட்ரோ. இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவோடு, 1959 இல் புரட்சியை வழிநடத்தி வெற்றி பெற்றார் பிடல் காஸ்ட்ரோ. அவர் 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வ