2008-ம் ஆண்டு வெறும் 4 இலட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ப்ளிப்கார்ட். இப்பொழுது 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. துடிப்பான இளைஞர்களான பின்னி பன்சால் (Binny Bansal) மற்றும் சச்சின் பன்சால் (Sachin Bansal) ஆகிய இருவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் 2007ம் ஆண்டு வரை பணியாற்றிய ஊழியர்கள். அவர்கள் இருவரும் டெல்லி ஐஐடியில் (IIT, Delhi) படித்தவர்கள். இருவரும் சிறந்த கல்லூரி நண்பர்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் நடைமுறைகளை மிக நன்றாக அறிந்து கொண்டிருந்த அவர்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேறினர். இவர்கள் இருவரும் இணைந்து சாதாரண அளவில் சிறிதாக பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவில் 2008-ம் ஆண்டு உருவாக்கினர்.