Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
இங்கே நிறுத்தக் கூடாது ❤️ • அ.முத்துலிங்கம், யாழ்ப்பாணம் கொக்குவில் கிராமத்தில் (என்னூர்) பிறந்து பல நாடுகளில் பணியாற்றி தற்போது கனடாவில் இருந்து கதை சொல்கிறார். கடந்த வருடம்தான் இவர் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என் பள்ளித்தோழியுடனான உரையாடலில் “நீ முத்துலிங்கம் கதைகள் வாசிச்சதில்லையே, வாசிச்சுப் பார். ஒரு கதைட தொடக்கமும் முடிவும் எப்படி இருக்கும் எண்டு”. அப்பொழுதே நினைத்துவிட்டேன் நிச்சயம் படிக்க வேண்டிய எழுத்தாளர் என்று. அப்படியே கால ஓட்டத்தில் மூன்று சிறுகதைப்புத்தகங்களும் வாங்கி வைத்துவிட்டேன். அண்மையில் பா.ராகவன் தனது புத்தகமொன்றில் இவர் பற்றி கூறியிருந்ததையும் வாசித்தேன். ‘நினைவோ ஒரு பறவை’ நா.முத்துக்குமாரின் புத்தகத்திலும் இவர் பற்றிய மேற்கோள் வரவே இறுதியாக இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தேன். • இத்தொகுப்பு பன்னிரண்டு சிறுகதைகளையும் இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகளையும் கொண்டது. இவர் கதை சொல்லும் விதம் சற்றே வேறுபட்டது. ‘செர்ரி மரம்’, ‘குமர்ப் பிள்ளை’, ‘இங்கே நிறுத்தக் கூடாது’, ‘ஒரு மணிநேரம் முன்பு’, ‘எங்கேயோ இப்ப மூன்று மணி’ இக்கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தன்மை. சில கதைகளின் இறுதியில் நண்பி சொன்னதுதான் ஞாபகம் வரும், அப்படியான முடிவுகள். உங்கள் உள்ளத்தை துளைத்து உணர்விற்கும், அறிவிற்கும் வேலை வைக்கும். • “சொந்தமான நாடு இல்லை என்றால் என்ன? உலகம் முழுவதுமே அவனுக்குச் சொந்தம் தான். கணியன் பூங்குன்றன் ஓர் அகதியாகக்கூட இருந்திருக்கலாம். மரம் வெட்டும் தச்சனின் சிறுவன் கோடரியுடன் காட்டுக்குள் போனால் அவனுக்கு மரமா கிடைக்காது? எத்திசை செலினும், அத்திசை சோறே.”