எழுத்தாளர் தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் என்று இயல்பாகத் தொடங்கியது. படிப்படியாக எழுத்தாளர் லஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி என்று தொடங்கிப் பல எழுத்தாளர்களை வாசித்து உள்ளேன். ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி படித்து முடிக்கும் வரையிலும் அந்த நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்துள்ளேன். கல்லூரி முடித்து திருப்பூர் வந்து சேர்ந்த போது என் வாசிப்பு அனுபவம் நின்றது. வாழ்க்கையில் என்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு 2009 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதன் பிறகு வாசித்த அனைத்து புத்தகங்களும் கட்டுரை சார்ந்த புத்தகங்கள் ஆகும். இன்று வரையிலும் சுமாராக பத்தாயிரம் புத்தகங்களுக்கு மேல் படித்து முடித்து இருப்பேன்.