வணக்கம்... நண்பர்களே.. இந்த கதையின் கரு - ஒரு குழந்தையை வளர்க்கும் போதே அதற்கு நல்லது கேட்டதை சொல்லி வளர்க்க வேண்டும்.. அதுவே அவனை ஒரு ஹீரோவா காட்டும் இல்லையேல் அது வில்லனாகவே வளரும்.. எனவே நமது பிள்ளைகள் ஹீரோவாக வேண்டும் என நினைத்தால்... தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்வோம்.. நல்ல பண்புகளை கூறி வளர்ப்போம்.. நாளைய சமுதாயத்தை நல்ல விதமாக வளர்ப்போம் என்பதே.. நன்றி
சச்சரவுகளும் கோபங்களும் எழும் இடத்திலிருந்து தான் புதிய துவக்கத்திற்கான முதலடி எடுத்து வைக்கப்படும்.
கூட்டுக்குடும்பத்தின் மகாராணியாக வலம் வரும் திலோவை முதல் முறையாகப் பார்க்கும் வீட்டு டிரைவர் ராஜுக்கு அதிர்ச்சியே என்றாலும் அதை மறைக்க முயன்று காதல் பார்வை வீசி அவளிடமிருந்து அதற்கேற்ப ஒத்திசைவு சைகையைப் பெற்றுவிடுகிறான்.
ஜமீன் பரம்பரை தந்தையுடன் கருத்து வேறுபாட்டால் கோபமாகக் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறி தற்பொழுது டிரைவர் வேலை பார்த்தாலும் பல வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவியாக இருந்த தன்னை பாதித்த திலோவின் வீட்டிற்கே வந்தது தங்கள் காதலின் ஆழத்தாலே என்று ராஜுவை எண்ண வைக்கிறது.
திலோவின் தொழில் எதிரி ஆதி எடுக்கும் நடவடிக்கை காதலர்களை நெருங்கச் செய்து அவனுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கச் செய்கிறது.
திலோ எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதால் ஜமீன் வீட்டு மருமகளாகக் காலடி எடுத்து வைத்து புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறாள்.