நீங்கள் துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கிச் சுட்டீருக்கிறீர்களா ? சீறிப் பாயும் தோட்டா துளைத்த உடலைக் கண்டுருக்கிறீர்களா ? உயிர்களைக் கொல்லவும், உரிமைகளைப் பறிக்கவும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்ப் பற்றி உங்கள் கருத்தென்ன ? அழிவுகளைக் கொடுக்கவும், தடுக்கவும், அடக்குமுறைக்கும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? பெருங் கனவுடன் வளரும் ஒரு இந்திய இளைஞன் அவன் விரும்பிய லட்சிய வாழ்வை அடைந்தானா ? அவன் மேற்கொண்ட பயணம், சந்தித்த மனிதர்கள், அவற்றுள் அவன் கற்றதென்ன ? அவனது வாழ்வை உங்கள் எண்ணவோட்டத்தோடு வாசித்துப் பாருங்கள்.
அறிவைக் கொண்டு தன்னை வார்த்தெடுத்தாலும் சில நேரங்களில் முடிவுகள் இதயத்தின் மெல்லிய அடுக்குகளிலிருந்து கிளம்புகிறது.
கனவைக் கனவாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற அறுதியான முடிவை எடுப்பது சுலபமல்ல அப்படிப்பட்ட முடிவை திலீபனை எடுக்க வைக்க முன் நிற்கும் நடந்தேறிய நிகழ்வுகளின் எச்சங்களே போதுமாகிறது.
While I was trying to away from social media, I had time to read a couple of long-pending books in my Kindle. One of the books is launched at last year Kindle's Pen to publish competition 'வலியறியாத தோட்டா'.
About this book, it was very quick to read, I enjoyed reading it. I could relate myself to some extent to the protagonist of this story also it made me think about my college NCC life and so on.
The story moves on the protagonist view on becoming an Army officer. In that journey, the author pouring us with a lot of information. The downside I felt is that with abundant information is given on each chapter story was cut shorted or very rushed one (due to kindle competition?).
I would recommend this book to those who interested in gun, army and war ;-)
வலியறியாத தோட்டா... மனம் வலிக்க சிந்திக்க வைத்த புத்தகம்.
"உலகத்துல எல்லா நாட்டு ராணுவமும் அப்படித்தான், களத்தில் எந்த வேறுபாடும் பார்க்காம கொலை செய்யும். உயிர் வலியறியாதது தோட்டா மட்டுமில்ல அதைச் சுடுற ஆர்மிக்காரனும் தான்".
ஆர்மிக்காரனை அப்படி செய்யச்சொல்லி ஆணையிடுவதும் உலக அரசியல் தானே, சில அரசியல் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் மௌனமாக பல உயிர்களை கொன்று குவிக்கத்தான் செய்கின்றன.
சில இடங்களில் மனம் வலித்தது ஆர்மி என்றபெயரில் அவர்கள் செய்த தவறுகளை எண்ணி.
The author has narrated the feelings of the people involved in the wars. He has also explained the ruthless nature of the armed forces. How every war affects the lives of people and why people are not able to come out of the feelings of war.
வாய்பில்லங்க அவ்வளவு அழகாக எழுதி இருக்கீங்க. உங்க எழுத்து நடை வேற லெவல்ல இருக்கு. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். முக்கியமாக ராணுவம், காவல்துறை போன்ற பணியில் சேர சினிமாவை பார்த்து ஆசை வளர்க்கும் இளைஞர்கள்.
Learn about Srilankan Tamil before you write about it.
The way he introduced the Srillankan Tamil slang is incorrect. Neengol vaangol etc. We, say neengal (நீங்கள்).Not நீங்கோல். And we say வாங்களன் not வாங்கோல்.
நாடு தான் தேசியம் என்று நினைக்கும் ஒருவன் எப்படி மக்கள் தான் தேசியம் என்பதை உணர ஆரம்பிக்கிறான் என்பது தான் கபிலன் காமராஜ் அவர்களின் வலியறியாத தோட்டாவின் ஒன்லைனர். இந்த புத்தகத்தில் வரும் SSB அனுபவங்கள் என் Airforce officers தேர்வு மற்றும் நேர்காணலை நினைவூட்டியது.
கபிலனின் subtle way of telling serious things - நிச்சயம் பாராட்டத்தக்கது. அவர் தொடர்ச்சியாக இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன்.