என் குறிப்பு ‘காலம் கலை கலைஞன்’ ஒரு தொடராகத் ‘தீராநதி’ இதழில் ஜூன் 2002 முதல் டிசம்பர் 2002 வரை வெளிவந்தது. என் கலை இலக்கியப் பார்வைகளைச் சுடராகக் கொண்டிருப்பது. இலக்கியம் ஒரு கனவு. காலம் காலமாகத் தொடரும் கனவு. வாழ்வுக்கான கனவுகளை நமக்கு உவந்தளிக்கும் கனவு. என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் என்னவாக இருக்கிறேன், என்னவாக இருக்க முடியும், என்னவாக இருக்கப் போகிறேன் என்பதைப் புத்தகங்களே தீர்மானித்திருக்கின்றன. எல்லாக் காலங்களினதும் மகத்தான கனவுகளாகப் புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் மறைந்து போனால் வரலாறு மறைந்து போகும் கூடவே மனிதனும். என் வாழ்க்கை, புத்தகங்களுக்குக் கடமைப்பட்டது. படைப்பாளி யார் என்பது பற்றியும், வாழும் காலத்துக்கும
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.