Jump to ratings and reviews
Rate this book

போலி அறிவியல், மாற்று மருத்துவம் & மூட நம்பிக்கை: ஒரு விஞ்ஞான உரையாடல்

Rate this book
ஆர்கானிக் உணவுகள் தான் உடலுக்கு நல்லதா? இயற்கை படைத்ததை இயற்கை காக்குமா? உடல் தன்னைத்தானே நோய்களை சரி செய்து கொள்ளுமா? தடுப்பூசிகள் என்பது இல்லுமினாட்டிகளின் சதி என்று நம்புகின்றீர்களா? இறைச்சி் உணவு மனிதனுக்கு ஏன் அவசியம்? அறிவியலையும், போலி அறிவியலையும் எப்படி பிரித்தறிவது? பொது சுகாதாரம் சந்தைமயம் ஆவதை அனுமதிக்க இயலுமா? மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் தொடர்பான, மேற்கண்ட வகையிலான பல்வேறு கேள்விகளுக்கு, விஞ்ஞானத்தின் வாயிலாக விடை தேட முயலுகின்றது "போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை" எனும் இந்த புத்தகம்.

168 pages, Kindle Edition

Published December 7, 2019

20 people are currently reading
94 people want to read

About the author

SATVA T

1 book1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
75 (63%)
4 stars
28 (23%)
3 stars
7 (5%)
2 stars
2 (1%)
1 star
6 (5%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Dhulkarnain.
86 reviews2 followers
March 10, 2023
மாற்று மருத்துவ முறைகளை முற்றிலுமாக ஏற்பது, அல்லது முற்றிலுமாக மறுப்பது. ஆங்கில மருத்துவத்தை முற்றிலுமாக ஏற்பது அல்லது முழுக்கவும் மறுப்பது. இந்த நிலைப்பாடுகள் அடிப்படையில் தவறானது.எல்லா மருத்துவ முறைகளிலும் நல்ல அம்சங்களும் இருக்கின்றது. அபத்தமான விஷயங்களும் இருக்கின்றது. இந்த நூல் முழு முற்றாக மாற்று மருத்துவ முறைகளை நிராகரிக்கின்றது. மாற்று மருத்துவ முறைகளில் நோய் வரும் முன்னே தற்காத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உண்டான வாழ்வியல் நடைமுறை பழக்க வழக்கங்களை தன்னுள்ளே கொண்டிருக்கின்றது. புகழ் பெற்ற ஆங்கில (விஞ்ஞான) மருத்துவர்களான தீபக் சோப்ரா, P. M.ஹெக்டே, விஸ்வரூப்ராய் போன்றவர்கள் ஆங்கில மருத்துவத்தின் அபத்தங்களையும், மோசடிகளையும் விமர்சிக்கிறார்கள். அதே சமயம் மாற்று மருத்துவ முறைகளில் உள்ள நல்ல அம்சங்களையும் பாராட்டுகிறார்கள். மருத்துவத்துறையில் தன்னிறைவு பெற்று உலகுக்கே முன்மாதிரியாகத் திகழும் கியூபாவில் மாற்று மருத்துவத்திற்குரிய அங்கீகாரத்தை அரசே வழங்குகின்றது. அதை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்குரிய நிதியை அரசே வழங்குகின்றது. நடுநிலை என்பது பக்கச்சார்பு இல்லாமல் எல்லாவற்றையும் திறந்த மனதோடு அணுகுவது மட்டுமே. பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்பதெல்லாம் நம் ஒவ்வொருவரின் சொந்த அனுபவத்தைக் கொண்டே இன்றும் நிலைத்து நிற்கின்றது. ஒரு தனி மனிதனுக்கு நோய் ஏற்படும் போது அதற்காக அவன் எடுத்துக் கொள்ளும் ஏதோ ஒரு மருத்துவ முறைகளின் சிகிச்சையின் போது அவன் அடைகின்ற அகம், புறம்சார்ந்த அனுபவத்தை, அந்த அனுபவத்தின் மூலம் அவன் கண்டடைகிற முடிவை (குணமடைதல் அல்லது குணமாகாத நிலை) இன்றைய விஞ்ஞான மருத்துவத்தின் எந்த அளவுகோலை கொண்டு இது சரி, அது தவறு என்று எப்படி முடிவு செய்வது. டயாக்னசிஸ் (நோய் அறியும் முறை) முறைகளும் அதன் அளவுகோள்களுமே கூட இன்றைக்கு விமர்சனத்திற்கு உள்ளாகின்றது.
Profile Image for Kesavaraj Ranganathan.
49 reviews7 followers
May 7, 2021
போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை - டாக்டர் சட்வா

இன்னிக்கு உலகம் ஒரு பெருந் தொற்றின் பிடியில சிக்கித் தவிச்சிக்கிட்டு இருக்கும் காலகட்டத்துல சமூகத்துல கலந்திருக்க கூடிய போலி அறிவியல் மாற்று மருத்துவ புரட்டுகளை பத்தியும், மூட நம்பிக்கைகளை பத்தியும் விளக்குறதுக்கு ஒரு சிறந்த புத்தகம் தான் போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை...

1950 கள்ல உலகத்தோட மக்கள் தொகை சுமார் 250 கோடி, 2000ஆம் அண்டு வாக்குல உலக மக்கள் தொகை 500 கோடிக்கும் மேல உயர்ந்திருக்கு...50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இந்தளவு உயர்ந்திருக்க காரணம் என்னனு உக்காந்து யோசிச்சு பார்த்தா அல்லோபதி மருத்துவம்னு சொல்லக் கூடிய நவீன விஞ்ஞான மருத்துவத்தின் வளர்ச்சியினால தான்!

நம்ம தாத்தா காலத்துல இருந்த வியாதிகளான பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, ப்ளேக், இன்புளுயன்சா, போலியோ முதலான நோய்கள் இப்போ கிடையாது...இதுக்கெல்லாம் காரணம் விஞ்ஞான மருத்துவம் கொடுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் தான்!

அப்படியே இந்தியா பக்கம் வந்தா 1947ல இந்திய சுதந்திரத்தின் போது இந்தியர்களோட சராசரி வயசு 31...இப்போ 2015ல நடந்த கணக்கெடுப்பின் படி சராசரி வயது 68 ஆக உயர்ந்திருக்கு பாதிக்கும் மேல இந்தியர்களோட சராசரி ஆயுட்காலம் உயர்ந்திருக்கு! இதுக்கெல்லாம் காரணம் பழமையான வீட்டு வைத்திய முறைகளையும், மாற்று மருத்துவும் னு சொல்லக் கூடிய ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகள்ல இருந்து பெரும்பான்மை இந்திய மக்கள் நவீன விஞ்ஞான மருத்துவம் பக்கம் நகர்ந்தது தான்!

வீட்டுமுறை பிரசவம், கை வைத்தியம், ஹீலர்கள், அக்குபிரசர்/ பஞ்சர் னு இன்னிக்கு இந்த மாற்று மருத்துவத்தோட ஆபத்தான ஆக்டோபஸ் கரங்கள் நிறைய மக்களை நவீன விஞ்ஞான மருத்துவத்துக்கிட்ட இருந்து விலக்கி பெரும் இடர்பாடுகள்ல சிக்க வெச்சிக்கிட்டு இருக்குங்குறத இந்த கொரோனா காலகட்டத்துல ரொம்ப நல்லாவே உணர்ந்திருப்போம்! இந்த மாதிரி எந்த ஒரு நீருபணமும் இல்லாத மருத்துவமுறைகள் எல்லாம் தேன் தடவிய பேச்சின் மூலமா மக்கள்கிட்ட ஈசியா நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிடுது!

நவீன விஞ்ஞான மருத்துவம் எப்போதும் result oriented ஆன அனுகுமுறையை பல்வேறு விதமான ஆய்வுகள் மூலம் தீவிரமா ஆராய்ச்சி பண்ணி மருந்துகளை அந்தந்த நோய்களின் குணத்திற்கு ஏற்ப கண்டுபிடிச்சு குடுக்கறாங்க...அதனால நவீன விஞ்ஞான மருத்துவம் ஒரு நிரூபணம் ஆன ஒரு அறிவியலா இருக்கு! இதே மாதிரியான அணுகுமுறை பாரம்பரிய/மாற்று/மரபு மருத்துவம் னு சொல்லக் கூடிய எந்த வைத்திய முறைகள்லயும் கிடையாது...

வீட்டு பிரசவத்தினாலயும், ஹீலர் பாஸ்கர் மாதிரியான அடிப்படை ஆதாரமில்லாத விசங்களை பரப்புறவங்களாலயும் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பை சரி செய்ய திரும்பவும் நவீன மருத்துவத்தை தேடிப் போனவங்க தான் ஏராளம்!

இந்த மாற்று மருத்துவர்களுடைய முக்கியமான பணியே மக்கள் மத்தியில நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் அறிவில் சிறந்தவர்கள் அப்படின்னு நம்ப வைக்குறதுல தான் ஆரம்பமாகுது...கூடவே இன்னொரு விசயம் இன்னிக்கு நமக்கு இருக்குற பல வியாதிகள் நம்ம முன்னோர்களுக்கு இருந்ததில்லை... இந்த வியாதிகள் எல்லாம் நவீன மருத்துவம் வேணும்னே உருவாக்கின மாயைன்னு பொய்யை பரப்புறதையும் தான் அடிப்படையா கொண்டிருக்கும்! கேன்சர், சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் எல்லாம் பழங்காலத்துல இருந்து மனிதனை பாதிச்சிட்டு தான் இருக்கு! ஆனா பழங்கால சூழல்ல என்னென்ன வியாதிகள் னு கண்டுபிடிக்க முடியாதனால கோடிக்கணக்கான மரணங்கள் நடந்திருக்கு...நவீன விஞ்ஞான மருத்துவத்தின் வருகையால துல்லியமான வியாதிகளை கண்டுபிடிச்சி அதுக்கான மருத்துவத்தை கொடுக்க முடிஞ்சிருக்கு!

அடுத்தது ஆர்கானிக் பொருட்கள்னு சொல்லபட கூடிய மோசடிகளையும் இந்த புத்தகம் தொட்டு பேசியிருக்கு! இன்னிக்கு நிறைய இடங்கள்ல ஆர்கானிக் னு சொல்லிக் கூடிய இயற்கை அங்காடிகள் னு சொல்லி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்கிறோம் ஊர்ல சாதாரணமா குறைந்த விலையில் கிடைக்க கூடிய பொருட்களை பேக்கிங் பண்ணி எக்கச்சக்க விலை வெச்சி விக்கிரத பத்தியும்...இதையே ஒரு Multi level market மூலம் பெரிய பெரிய கார்ப்பரேட்கள் மக்களை மொட்டையடிக்கிறதையும் சொல்லிருக்காங்க!

இதே மாதிரி இன்னிக்கு உலகம் முழுவதும் பரவலா பின்பற்றப்படும் நனிசைவம் என்னும் வீகன் உணவுமுறைங்குற பாடாவதி உணவுமுறையை பத்தின மாயபிம்பத்தை உடைக்கிது இந்த நூல்! பிரிட்டனில் 1850 முதல் 1950 வரைக்கு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் 2017ல வெளியானது அதுல அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்க கூடிய இன மக்களோட வளர்ச்சி அதிகமாக இருக்குங்குறத கண்டுபிடிச்சிருக்காங்க...அப்படியே இந்தியா பக்கம் வந்தா யுனிசெப் அமைப்பின் புள்ளிவிவரங்கள் இந்திய குழந்தைகளை பாதிக்க கூடிய்ஊட்டச்சத்து குறைபாடு பற்றின கவலையளிக்கும் தோற்றத்தை குடுக்குது! ஆகவே நம்முடைய உணவுமுறையில நாம அசைவத்தை வாரத்துல 3-4 நாள் எடுத்துக்குறது இன்றியமையாத ஒன்று!

இந்��� மாதிரி நம்ம உடல் ஆரோக்கியத்தை பத்தியும், மருத்துவமுறைகளை பத்தியும், சமூகத்துல இருக்கும் தவறான கண்ணோட்டங்களையும் களைகிற ஒரு புத்தகமாக போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை! இந்த பெருந்தொற்று காலத்தில் நண்பர்கள் இந்த நூலை வாசிப்பது மிக பொருத்தமான விருசமாக கருதி இதை பரிந்துரைக்கிறேன்!
34 reviews2 followers
August 15, 2020
One of the best books that I read in this topic.

I highly recommend this book as it clearly explains with evidence about the alternative medicine scam. It the duty of the reader to discuss this topic with friends and tamil and make them aware.
Profile Image for Vijaya Pathi.
1 review
August 4, 2021
அருமை!

மிகவும் எளிமையான, புரிந்து கொள்ள சுலபமான எழுத்து நடை! இதிலும் கூட, புத்தம், பெரியாரியம், திராவிடம், மார்க்சிய சிந்தனைகள் உயர்த்திப் பிடிக்கப் படுவதுதான் நெருடல். தொற்றும் நோய்களை பல்வேறு எதிர்புக்களுக்கு மத்தியில் பெருமளவு வெற்றி கொண்ட நம்மை, "உணவுப் பாதுகாப்பு" என்ற பெயரில் இலவசமாக/குறைந்த விலையில் வழங்கப்பட்ட அதிக மாவுச்சத்து கொண்ட அரிசி/கோதுமை முதலியன நம் சந்ததி தொற்றா நோய்களால் சுகவீனர்களாக ஆகிவிட்டதும் ஆராயப் பட வேண்டியதே!
1 review
December 10, 2019
Needed one for this generation

Excellent work, Great insight about each topics discussed and clearly shows, how innocent people has been targetted and robbed by the means of faith and innocence. Expecting more release from the author. This type of publications can help in eradicate the wrong belief in current and upcoming generations. Please continue the good work.
27 reviews
December 11, 2019
A must read book

This book is breaking the myth of growing pseudoscience frauds. This book also tells why people choosing alternative medicine over proven scientific evidence based medicine and how to rectify it.

If you feel you and your family need to have a healthy and safe life, please read this book and share with in your circle.
18 reviews1 follower
December 15, 2019
Kudos to the author

On simple language the author explained the pseudo medicines, he delt almost all the matters against science and modern medicine.

I learnt lot and lot from this book.
Profile Image for Suba.
18 reviews
January 1, 2020
Awesome book

Very informational .. I would like to provide a copy this book to people who refuse vaccines ,, resort to alternative medicines without basic knowledge of why a medication is prescribed.. kudos to the author! Great effort.
2 reviews1 follower
Read
January 20, 2020
A Book to Ignite Scientific Temper

This is fabulous. It encourages the readers to question, think, decide what is scientific and what is not. Author has taken a fine step in making the public understand the false science and it's dangers. Must read book at this time period.
1 review
September 7, 2020
Simply amazing!

Much needed one for the confused common man, surrounded by emotional attachment, in clarifying the modern medicine world and helping me gain a great deal of knowledge. What's so awesome is it's pretty concise!
Profile Image for Balaji Sundar.
2 reviews
July 14, 2021
Dr. Satva has done a Awesome job.
The good thing I liked in this book is Instead of giving an in-depth knowledge on single subject he has covered many topics with clear and basic idea.
It's a must read book for Current situation
The data's he referred and the way he conveyed are Eye opener.
Profile Image for Arun Raj.
8 reviews
July 26, 2021
This Book is need of the hour.

Author has answered the half baked questions that waa raised by people who oppose modern science, vaccines.. Evidences for breaking the misconception that the olden days were Golden days were provided throught out thia book..
Profile Image for Vijaya Ragavan.
12 reviews
September 10, 2022
Simple, lucid, yet insightful

This book is a collection of essays on several pathys and healers and their ways of curing diseases, it claims. It is much-needed work to make people aware of such magicians.
1 review
December 11, 2019
Must Read!

எளிமையான எழுத்து நடை! அருமையான உதாரணங்கள்,
பல புதிய தகவல்கள்.

கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
மாற்று மருத்துவம் மாற்றத்திற்கானதன்று.


நன்றி Dr Satva T !

2 reviews
December 26, 2019
Must read book

I think doctor has given a torch on everyone's hand and it's our duty to light up & know the truth behind the darkness..
24 reviews1 follower
September 25, 2020
மருத்துவ அறிவை வளர்க்க தமிழில் ஒரு நூல்

21ம் நூற்றாண்டில் மக்களின் மருத்துவம் சார்ந்த எண்ணங்கள் எப்படி இருக்கனும், ஏன், என்ற கேள்விகளுக்கு விடைகள் உள்ளன. தமிழ் தெரிந்த அனைவரும் படித்துப் பயன் பெறலாம். ஆசிரியருக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்!

தலைப்பு எதிர்மறையாய் உள்ளது. நேர்மறையாய் பாசிடிவான தலைப்பில் அச்சுப்புத்தகமாய் வெளியிடும். பரிசு நூலாய் மாணவர்களுக்கு அளிக்க வசதியாய்.
1 review
Read
January 30, 2020
இந்த புத்தகத்தின் மூலம் மருத்துவத்தை பற்றி ஓரளவு தெரிந்துக் கொண்டேன்
3 reviews
January 5, 2020
Excellent book on general health issues, diseases . after read this you can differentiate what is the scientific medicine actually.it help us to understand why scientific medicine amd treatment is very much important to identity fake and improve our health

Excellent book on general health issues, diseases . after read this you can differentiate what is the scientific medicine actually.it help us to understand why scientific medicine amd treatment is very much important to identity fake and improve our health
Displaying 1 - 19 of 19 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.