"கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க." என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்
A very common poor patient vs Doctor problems, nicely written and explained. One can able to understand doctors stand through two of his, a decade old post.