வெற்றி என்ற ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் விளைவுகளும்,பாரதியின் காதலும் அதனால் ஏற்படும் திருப்பங்களும் நிறைந்த அழகிய காதல் கதை. நெல்லும்,முந்திரியும் அவர்கள் தோட்டத்தில் விளைந்து குவிந்து கிடந்தது.மேகமலையில் எஸ்டேட்டும்....கூடலூர்..கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் எஸ்டேட்டும்.... பரந்து விரிந்திருந்தது. காலம் காலமாக செய்த விவசாயத்தை அப்படியே பின்பற்றி..அதில் சில புதுமைகளைப் புகுத்தி...அதல் வெற்றியும் கண்டனர்.இவர்களின் வெற்றிக்கு காரணம்...இளைய மகன் வெற்றி என்றால் மிகையில்லை. மழை நின்ற பின்பு கிளம்பினாலும்....அதற்கு பிறகு விழுந்த சாரலில்... கொஞ்சம் நனைந்தவனாய்....தூய வெள்ளை வேட்டியும்...கரும் சிவப்பு நிற சட்டையும்...