சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர். சிவனின் 64 வடிவங்களில் ஒருவர் வீரபத்திரர். இவர் அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர். தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். சிவனாரின் ருத்ர தாண்டவத்தின்போது, வியர்வைத் துளி பூமியில் விழ, அதில் இருந்து வெளிப்பட்டவர் வீரபத்திரர் என்பர். சிவனார் சடையின் இரண்டு முடிகளில் இருந்து பத்ரகாளியும் வீரபத்திரரும் தோன்றியதாகவும் சொல்வர். பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் சிவபெருமானுக்கு தட்சன் மாமனார் ஆனான். இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந&#