விறுவிறுப்பான நடையில் ஏராளமான செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜோதி கணேசன். எஸ்.சம்பத் தமிழில் சுயமுன்னேற்றப் புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள் தாண்டி தனிப்பட்ட நபர்களது அனுபவக்குறிப்புகள், குறிப்பாக வியாபாரம் சார்ந்த விசய ஞானம் உடையவர்கள் எழுதிய புத்தகங்கள் மிகக்குறைவு. வியாபாரத்தில் ஓகோவென்று வருவது எப்படி, தொழிலில் சாதிக்க நினைப்பவர்களுக்கான சூட்சுமங்கள் என்பது மாதிரியான வழவழா கொழகொழா புத்தகங்களுக்கு மத்தியில் இத்தகைய புத்தகங்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல ஆரம்பம். RS Prabu பணம் கிடைத்தால் வகைவகையாய் பானை வாங்கி கூத்தாடும் மனிதர்களின் அந்தரங்கத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறது.