சாபத்திற்குச் சக்தி உண்டா? ஆம் உண்டு. அநியாயமாய் சிந்த வைக்கும் கண்ணீருக்கு விலை உண்டா? ஏன் இல்லை நிச்சயம் உண்டு. ஏழைகள் மீது ஏறி மிதித்து அவர்களை நசுக்குபவர்களுக்குத் தண்டனை கிடைக்குமா? கட்டாயம் கிடைக்கும். உலகில் அநியாயம் மட்டும்தான் வெல்லுமா? இல்லவே இல்லை நியாயம் நிச்சயம் வெல்லும். அப்படியெனில் நல்லவர்கள் ஏன் நாளுக்கு நாள் கீழாய் போகிறார்கள்? கெட்டவன் துரோகி, வஞ்சகன், கோள் மூட்டுபவன், காலை பிடிப்பவன், கழுத்தை நெரிப்பவன் எப்படி முன்னேறி முன்னுக்குச் செல்கிறார்கள்? மூதேவி தொடர வேண்டியவர்களை ஏன் ஸ்ரீதேவி தொடருகிறாள்? ஏன் எதனால் நல்லவனுக்கு மட்டும் இத்தனை பிரச்சனை, இத்தனை சோதனை? அவனுடைய உண்மைக்கு மட்டும் தோல்விகளே பரிசாகக் கிடைக்கின்றன.