தமிழ்நாட்டில் வாழும் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கல்வி. இதன் மூலம் மட்டுமே தங்கள் குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை. நிச்சயமாக தங்கள் பொருளாதார சூழலை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற ஆர்வம். இது தான் இவர்களை இன்றும் நம்பிக்கை இழக்காமல் இயங்க வைத்து கொண்டிருக்கின்றது. இதற்காக ஒவ்வொருவரும் குழந்தைகள் மேல் வைக்கப்பட வேண்டிய அக்கறையைவிடப் பந்தயத்தில் கட்டப்படுகின்ற பணம் போல அவர்களின் கல்விக்குச் செலவிடத் தயாராக இருக்கின்றார்கள். தங்கள் தகுதிக்கு மீறி பணம் அதிகமாக வாங்கும் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்திட வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றார்கள்.