கோடிக்கோடியாய் கொடுத்தாலும் பெறமுடியாத அற்புத பொக்கிஷங்கள் இவை. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அறிஞர்கள், மேதைகள், ஞானிகளின் பட்டியலைப் பார்த்தாலே இந்த நூலை வாங்காமலோ படிக்காமலோ உங்களால் இருக்க முடியாது. நாம் மிகப்பெரிய ஞானிகள் அல்ல.. ஆனால் மிகப்பெரிய ஞானத்தை நாம் பெற முடியும். உலகின் தலைசிறந்த ஞானிகள், தத்துவ மேதைகள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள், மேலாண்மை குருக்கள் இவர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள கொடைகளை, அறிவுரைகளை முறையாகப் படித்து அவற்றின்படி நடந்தாலே போதும். இந்த நூலினை நான் தொகுக்க ஆரம்பிக்கும்போது, மிகவும் சாதாரணமான ஒரு நூலாகவே தொடங்கினேன். ஆனால் முதல் வேலையாக இதில் யாருடைய கருத்துகள் எல்லாம் இடம்பெறலாம்.