சத்யமூர்த்தி விவசாயி... பத்மவர்ஷினி தொழிலதிபர்... இருவருக்குள் ஏற்படும் காதல் மனதால் பின்னி பிணைந்தாலும் படிப்பு, அந்தஸ்து, பணம், அழகு இவற்றால் பிளந்து நிற்கிறது. இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே இந்தக் கதை. பத்மவர்ஷினி : "நான் அந்தஸ்து பார்க்கிறவளா...? அப்படி நான் அந்தஸ்து பார்க்கிறவளா இருந்திருந்தா நீ என் கால் விரல் நுனியை கூடத் தொட்டிருக்க முடியாதுடா... உன்னை மனசுக்குள் வச்சியிருக்கிறதால் தான் உன்னை இந்தளவுக்கு நெருங்க விட்டிருக்கிறேன்... அதை நீ நல்லா ஞாபகம் வச்சுக்கோ..." "நான் உடல் சுகம் தேடி அலையறவளா...? ஆமாடா, அப்படித்தான்னா என்னடா பண்ணுவ...? நான் என்ன வேறொருத்தன் கிட்டேயா அலைஞ்சேன்...? எனக்குச் சொந்தமான உன் கிட்ட தானே வந்தேன்...