Jump to ratings and reviews
Rate this book

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

Rate this book
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.

நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.

240 pages, Paperback

First published January 1, 2018

106 people are currently reading
118 people want to read

About the author

Jeyamohan

211 books848 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
103 (55%)
4 stars
61 (32%)
3 stars
19 (10%)
2 stars
1 (<1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Karthick.
371 reviews123 followers
October 11, 2024
ஜெயமோகனின் அபாரமான படைப்புகளில் இந்த புத்தகத்தையும் சொல்லவேண்டும். கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டத்தை சார்ந்த நாட்டார் தெய்வங்களின் கதைகளின் தொகுப்பே "தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்".

தெய்வங்களில் வலிமையானவை, வலிமையற்றவை, தேவதைகள், பேய்கள் என்று பல பரிமாணங்கள் கொண்ட கதைகள் ஒவ்வொன்றும் அற்புதம். தெய்வங்களுக்கும், இந்தியாவின் தொன்ம மரபுகளுக்கு என்ன உறவு, அவை எப்படி உருவாயின, உணர்வுநிலைகள் என்ன என்ற அலசுகிறது.
Profile Image for Dhevaguru S.
72 reviews7 followers
January 23, 2023
Having grown up with my grandparents and sharing my whole childhood with them, there was never a shortage of stories of local legends and folktales. I also developed a profound sense of interest in learning such mythologies and folktales as a pastime as I was surrounded by affluent sources to feed my curiosity in this subject. My interest was consistently fed by the books of Hindu mythology and with my personal experience visiting numerous temples of India as it was a routine of my grandparents. My interest has survived through the years and with my major ideological differences. With that, I'm setting forth my journey into Jeyamohan's Bibliography with this collection of folktales, legends, and mythologies pertaining to the regional gods, deities, and supernatural spirits of Tamilnadu, especially of the southern parts of Tamilnadu sharing political and cultural borders with the neighboring states of Kerala. Jeyamohan encompassed my attention with his captivating writing and by sharing his extensive research on the subject blending with that the recollection of his childhood memories related to the subject. Although this book served well to my interest and as a good source of entertainment, I had to approach this book with an ideological conflict with the author. Ignoring the author's remarks, beliefs, and standpoint on the subject while acknowledging the weak credibility of the subject with its lack of historical sources, I enjoyed this as I would with any other good collection of fictional tales. The work put into the retracement of the incidents of legends and the convincing attempt to rationalize such events from the author is commendable. The nature of the book, the subject, and the author's attempt all can be surmised on a single statement of the book-
" ஒருவர் ஒன்றை முழுதாக நம்பிச் சொன்னால் நாமும் நம்பத்தொடங்கி விடுவோம். அது மனிதர்களின் ஆள்கூட்ட மனநிலை."

adding to that-
"நாமனைவருமே அப்படி நாம் வாழும் மாற்றமுடியாத யதார்த்ததில் இருந்து விலகி ஒரு கற்பனை உலகை உருவாக்கிக்கொண்டு தான் வாழ்கிறோம். அங்கே நட்பும் பகையும் உறவும் பிரிவும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மானுடருக்கு அவர்கள் வாழக்கிடைத்த இந்த உலகம் போதவில்லை. அது இறுக்கமான சுவர்கள் கொண்ட அறை. அதை திறந்து வெளிக்காற்றில், வானத்திற்குச் செல்வது போன்றது கற்பனை"
Profile Image for Aravind Sathyadev.
16 reviews9 followers
September 27, 2022
பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைக்கட்டுரைகள். புத்தகத்தின் ஆங்காங்கே வருகின்ற ஜெயமோகன் அவர்களின் விமர்சனங்களை தவிர்த்துவிட்டு பார்க்கையில் நாட்டார் தெய்வங்களின் மரபியலுக்காகவும் கதைகளுக்காகவும் நிச்சயம் வாசிக்கலாம்.
Profile Image for Sudeeran Nair.
93 reviews21 followers
January 2, 2025
ஆங்கில ஆண்டின் தொடக்க நாளே மிகச் சிறப்பாக அமைந்தது காரணம் முதல் நாளே ஒரு புத்தகத்தை முடித்தது.. ஜெயமோகனின்
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி பாதி வரை முடித்தது இன்று புத்தாண்டின் முதல் நாளில் முழுதுமாய் வாசித்தாயிற்று ...

நாட்டார் தெய்வங்கள் உருவான கருத்தாக்கங்களை ஜெமோ தன் பாணியில் மிக அருமையாக முன்வைத்திருக்கிறார்..... நாட்டார் தெய்வங்கள் என்றாலே முன்னோர்கள் என்ற கோட்பாட்டில் இருந்த எனக்கு சிறு தெய்வத் தோன்றல்களின் ஒவ்வொரு கதைகள் பெரும் பிரமிப்பை புகுத்தியிருக்கிறது. சில கதைகள் தெரிந்தவை பல கதைகள் பரிச்சியமில்லாதவைகள் ஆயினும் அவை அனைத்து என்னுள் அணுக்கத்தை தந்திருக்கிறது. தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் சிறு தெய்வங்களே முழுதுமாய் இக்கதைகளில் நிறைந்திருக்கிறது. .வாசிக்கும் போதே பெரும் மனநிறைவோடே இப்புத்தகம் என்னை கொண்டு சென்றது. காரணம் எனது பிறப்பாக வழியாக இருக்கலாம்.


நான் பிறந்தது கேரள மாநிலம் பாலக்காட்டின் உள் கிராமத்தில் தான். வருடமொரு முறை பள்ளிக் காலத்தில் செல்வதே பெரும் சாதனை. தந்தையாரும் வேலை தமிழ்நாடு என்பதாலும், படித்ததும் வளர்ந்ததும் இங்கே என்பதும் பூர்வீகத்தின் விடுபடல் சாதாரணமாகவே நிகழ்ந்து போய் விட்டது.

இப் புத்தகம் வாசிக்கும் போதே என்னுள் ஏறி அமர்ந்த காட்சிகள் என் பிறந்த கிராமத்தின் நாட்டார் தெய்வங்கள் தான்... அங்கு முனி, கருங்குட்டி, பகவதி, சாஸ்தா , அம்மன்கள், மணி நாகம், வேலப்பாடு, குருதி பூஜை கொண்டாட்டங்கள் இவை அனைத்தும் கண் முன்னே வந்து வந்து போயின...

அந்த கல் ஏன் அங்கு இருக்கிறது. ஏன் இந்த தெய்வங்கள் இங்கு பிரதிஷ்டை செய்தார்கள் என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாது போனது தமிழக நகரச் சூழலில் வளர்ந்ததாக இருந்திருக்கலாம். என்னைப் போலவே பலர் பல்வேறு காரணங்களால் பிறந்த இடத்தை விட்டு வேறு இடம் பெயர்வதும் காலப்போக்கிலும், நகர மையச் சூழலிலும் தங்கள் பிறந்த இடத்தின் சுவடுகளை தங்களை அறியாமல் விட்டு விடுவதும் நடந்தேறி விடுகிறது...

இப்போதும் எனது சொந்த ஊரில் காலடி வைக்கும் போதே என்றுள் இனம் புரியாத உணர்வுகள் மீண்டெழுப்பி உள் மனதில் பெரும் போராட்டத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

தற்போது அதைப் பற்றிய புரிதல் மெல்லிய இழை போன்று தோன்றும் நேரம் எங்கள் பூர்விகம் கைவிட்டு போய் பல வருடங்கள் ஆகியிருக்கிறது. ஜெமோ சொல்வது போலத்தான் எங்கள் தந்தை வழி வீட்டில் வருடமொரு பெரும் பூஜை நடத்தி விழா எடுப்பார்கள். நாங்கள் தாய்வழி முறை என்பதால் எங்களுக்கு பெரிய அளவில் அங்கு ஒட்டுதல் இல்லை. இருந்தாலும் அந்த பூஜையில் ஒன்றிரண்டு முறை கலந்து கொண்டிருக்கிறேன்..

குலசாமிகளும் , காவல் தெய்வங்களும், பரிவார தேவதைகளும், நாகங்களும் , விருட்சங்களும், இவைதான் நமது வேர்கள் இவைகளிலிருந்து நமது பண்பாடுகளும், கோட்பாடுகளும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் முளைத்து கிளைப் பரப்பி கொண்டிருக்கிருக்கின்றன. இவைதான் வரும் வழி சந்ததியினருக்கு இளைப்பாகும் இடம் என்பதை ஒவ்வொரு வருக்கும் சொல்லித் தர வேண்டி ஒன்று.

எங்கு இவைகள் மீறப்படுகிறதோ அல்லது மறக்கப் படுகிறோதோ மறைக்கப்படுகிறதோ அங்கு நாம் நாதியற்றவர்களாகவே மாற்றப் படுகிறோம்.. வேர்களை வெட்டி அறுத்த பின் விருட்சத்திற்கு நீ௹ற்றி என்ன பயன் என்பதே... ,

ஜெமோ வழி நாட்டார் தெய்வங்களின் பற்றிய கதைகள் பெரும் சுவராஸ்ய பயணமாகவே இருக்கும்.
183 reviews17 followers
January 28, 2019
பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள்

ஜெயமோகன் எழுதிய இந்நூல் நம் நாட்டார் மரபின் கதைகள் வழி நம் மரபை இன்னும் ஆழமாக நமக்கு அறிமுகப் படுத்துகிறது . பொதுவாக ஹிந்து மதம் மூன்று அடுக்கு அமைப்பு கொண்டது. அதன் அடித்தளத்தில் இருப்பது நாட்டார் தெய்வங்கள், அதன் மேல் பெரும் தெய்வங்கள் சிவன் விஷ்ணுவை போல. மூன்றாம் தளம் பிரம்மம் என்னும் தத்துவ உருவகம். பொதுவாக இவை ஒன்றோடு ஒன்று ஆழ பிணைந்து உள்ளது என்பதை இந்த நூலில் வரும் கட்டுரைகள் நமக்கு காட்டுகின்றன.

நாட்டார் மரபில் இருக்கும் கடவுள்கள் தான் உண்மையான மக்களின் தெய்வங்கள் என்றும், பெரும் தெய்வங்கள் பெரும்பாலும் ஆத��க்கத்தின் கடவுள்கள் என்று போல ஒரு அபத்தமான குற்றச்சாட்டு ஹிந்து மதத்தின் மேல் வைக்கப் படுகிறது. மாறாக இந்நூலில் வரும் நாட்டார் தெய்வங்கள் ஹிந்து மதத்தின் புராண, தத்துவ தரப்புடன் தன்னை எப்படி இணைத்து கொண்டு உள்ளது என்பதை கட்டுரைகள் நமக்கு காட்டுகின்றன.

இந்நூலின் கட்டுரைகள் பெரும்பாலும் ஒரு தனி அனுபவத்தில் இருந்து தொண்டங்குகின்றன பெரும்பாலும் ஜெயமோகன் வாழும் தென் குமரி நிலம் சார்ந்த தொன்மங்களில் இருந்து. இவை இத்தொன்ம கதைகளின் குறியீட்டு அர்த்தம், அதன் அழகியல், அவை பேசும் அறம், அந்த தெய்வம் உருவான ஆழ் மனநிலை என்று பல திசைகளில் பயணிக்கிறது கட்டுரை.

பல நுண்மைகளை, பொது அம்சங்களை இக்கட்டுரையில் நாம் காண்கிறோம்.
குறிப்பாக வேறு வேறு இடங்களில் வரும் யட்சி கதைகள் செண்பக யட்சி, பெண் தெய்வங்கள் நம் மரபில் உருவாகும் விதம், அவர்கள் அநீதி இழைக்கப்பட்டு இறக்கிறார்கள், அந்த சமூகம் அச்செயலின் குற்ற உணர்வு கொண்டு அவர்கள் தெய்வங்களாக உருவகப் படுத்த படுகிறார்கள்.
அவர்கள் பூஜைகள் மூலம் அமைதிப் படுத்த படுகிறார்கள், பிறகும் அருளும் தெய்வங்களாக உருவம் கொள்கிறார்கள். அவர்களின் கதை தலைமுறைகளுக்கும் ஒரு ஆழ் நினைவாக போற்றப் படுகிறது. இக்கதைகளை வெறும் கட்டுக்கதை என்று ஒதுக்குவது எத்தகைய பிழை என்பதை ஜெயமோகன் சரியாக சுட்டிக் காட்டுகிறார்.

பல தொன்ம கதைகள் மிகவும் கவித்துவ அழகு கொண்டு மிளிர்கிறது. குறிப்பாக முதல் கட்டுரையில் வரும் வாசுகியின் கதை நமக்கு எருமையும்/பனையும் எப்படி மண்ணில் வந்தது என்னும் கதையை நமக்கு சொல்லும் இடம். பேச்சிப் பாறை அணை கட்டப்படும் போது இறக்கும் மனிதர்களை அச்சமூகம் நினைவு கொள்ளும் இடம். மார்த்தாண்ட வர்மா உம்மிணி குட்டியை ஏமாற்றிய பின்பும் அவளால் மன்னரை கொள்ள முடியாத காதலை சொல்லும் இடம். முத்துபட்டன் தன் கொண்ட காதலுக்காக அனைத்தையும் துறந்து வரும் இடம்.

மற்றும் ஒரு அம்சம் நாம் இன்று பார்க்கும் பெரும் தெய்வங்கள் சிவன் விஷ்ணு கூட நாட்டார் பழங்குடி மரபில் இருந்து வந்தவை தான். இந்நூலில் தனி சிறப்புகளில் ஒன்று நாட்டார் கதைகளில் இருந்து தத்துவம் நோக்கி நிகழும் தாவல் குறிப்பாக ஜேஷ்டையின் கதையில் இருந்து ஜெயமோகன் யோகத்தின் ஆழங்களுக்குள் செல்லும் இடம். கேசி, கேசன் தொன்மம் மேல் அமரும் ஆதிகேசவனின் கதை என்று இக்கட்டுரை தொகுப்பு நமக்கு பல தளங்களில் நம் மரபை ஆழமாக அறிமுகப் படுத்துகிறது.
39 reviews6 followers
March 1, 2018
Fantastic Read...

I ve been reading Jeyamohan for the past 9 years, Never once did he cease to amaze me..This book is a treasure trove of folklore from Southern TamilNadu and like the author says most from that region can identify their family deity with one of those stories...More than that this book is an intellectual tool to break cultural barriers and get an understanding of " Others" , whoever be that may , on the other side..
40 reviews1 follower
November 12, 2025
Review of Deivangal, Peigal, Devargal by Jeyamohan

Deivangal, Peigal, Devargal is an exceptional work by Jeyamohan, beautifully weaving stories set in the villages of Kanyakumari district. The book captures the essence of village life while exploring profound themes through multiple dimensions of storytelling.
As Anand Neelakantan says, “Many Ramayanas, Many Lessons,” this book similarly presents diverse narratives, each offering unique perspectives and insights. I’ve heard many stories about Henry Alexander Minchin, the chief engineer of the Peechiparai Dam, but Jeyamohan introduces an unusual angle—portraying him in conflict with Kodai.
Traditionally, the stories speak of two river goddesses, Kodai and Parali—Kodai as gentle and loving, Parali as strong and arrogant—both flowing from the hilltops to meet at Moovattu Mugam. Jeyamohan’s interpretation adds a fascinating twist to these myths, blending history and folklore in a way that feels fresh and different.
It’s a compact yet powerful book, deeply engaging and intellectually stimulating. A truly nice read that lingers in your mind long after you finish. I thoroughly enjoyed it!
Profile Image for Sree RengaNathan Ayyapalam.
2 reviews
August 23, 2022
Good book to understand the relations between clan , family , village deities to the central deities . How small deities are created and how they are absorbed into the central big deities . Sociological and phycological Reasons behind the formations of the small deities and their contributions to the society . It deals different perspectives of the creation of new deities and their elevation to the big deities other than the one dimensional theory of caste conspiracy where these religious elements were injected from top to bottom.
1 review
May 6, 2020
Good research by the author and a lovely flow of the language.

The author is well known for his lucid style of writing.Once you start reading this book you would like to complete the reading in one stroke
2 reviews
September 3, 2018
Good read.

Good read. Some times it seems as though stories are similar. Never the less still a good read for everyone.
Profile Image for Balaji Cr.
17 reviews
August 27, 2019
Must to read

Nice fictional documentary of tamil folk stories
Amazing collection of stories across different landscape of Tamil Nadu
Thrilling reading experience is guaranteed
Profile Image for Balagei.
8 reviews3 followers
June 15, 2021
Sorry telling at a different level. You can feel all emotions running wildly inside you when reading this.
Profile Image for Rajendira Nirmal.
20 reviews
August 17, 2022
நாம் உலகமெல்லாம் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள் தான்.......
2 reviews1 follower
January 8, 2024
Felt like the author inserted his own agenda into the stories.
15 reviews
Read
January 9, 2019
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

வேதங்களில் உள்ள ஒரு அறிய படிமம் மூன்று தலைகள் கொண்ட முனிவர் "திரிசிரஸ்". ஒரு தலை கல்லும் ஊனும் உண்டு களித்திருக்கும், இரண்டாம் தலை வேதமோதியபடி மகிழ்திருக்கும் , மூன்றாம் தலை இவை அனைத்தையும் பார்த்து ஞானத்தில் தன்னுள் மூழ்கியிருக்கும். இவை மூன்றும் முறையே நாட்டார்-மூத்தார்-நீத்தார் தெய்வ வழிபாடு, வைணவ-சைவ-பெருந்தெய்வ வழிபாடு மற்றும் அருவுருவ-தத்துவ-அத்வைத வழிபாடாக இந்து மதத்தை சரியாக வகைப்படுத்த்தும் படிமமாக உள்ளது. இவை மூன்றும் பார்ப்பதற்கு வேறு வேறாக தெரிந்தாலும் மூன்றும் ஒன்று தான், ஒருவரின் முகம் தான் ஆனால் மூன்று வெவ்வேறு கோணங்கள் என்ற புரிதலே, இந்த மதத்தையும் அதன் கட்டமைப்பையும் தெரிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும். இதை எழுத்தாளர் ஜெயமோகன் தனது எழுத்துகளில் தொடர்ந்து வலியுறுத்து வாசகர்கள் மத்தியில் புரிதலை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் என்ற புத்தகம் 37 சிறு கதைகள் கொண்டது. அனைத்தும் நாட்டார்-நீத்தார் தெய்வ கதைகள். பெரும்பாலும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி யை சுற்றி இருக்கும் நாட்டார் தெய்வங்களை பற்றியது. இக்கதைகள் அனைத்தும் பெரும்பாலும் மக்கள் வாய்மொழி கதைகளாகவே வாழையடி வாழையாக வந்துகொண்டிருப்பதால் மீகற்பனைகளும் திகிலும் நிறைந்ததாக உள்ளது. ஒரு நாட்டார் தெய்வத்தை பற்றி மக்களிடம் புழங்கும் கதைகளே பலவாகவும் உள்ளது. ஒரு நாட்டார் தெய்வத்தை பற்றி, மக்களிடம் புழங்கும் கதைகள் அனைத்தையும் மக்களின் பார்வையிலேயே சொல்லி, அது எவ்வாறு இந்து மத தொகுப்பில் இடம்கொண்டது என்ற ஆசிரியரின் பார்வையையும் பதிந்திருப்பது சிறப்பாகவும் சிந்தனையை தூண்டுவதாகவும் உள்ளது.
பொதுவாக நாட்டார் தெய்வங்கள் என்றாலே நான் காவல் தெய்வமாகவே நினைத்திருந்தேன். என்றோ வாழ்ந்த ஒரு முன்னோரால் அவரின் உயிர் தியாகத்தால் ஒரு இனமோ, ஊரோ, குடும்பமோ காப்பாற்ற பற்றிக்கலாம், அவருக்கு நன்றி செலுத்தவும் தொடர்ந்து அருள் புரிந்து காப்பாற்ற கோரியும் நம் முன்னோர்கள் பல்லாயிர நாட்டார் தெய்வங்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதே என் புரிதலாக இருந்தது. என் தந்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார், அதன் பிறகு என் தாய், எந்த கோவிலுக்கும் செல்வது இல்லை. என் தாயின் விருப்ப தெய்வமான விஷ்ணு வை கூட துறந்தார் . என் தந்தையின் படத்தை மட்டுமே என் தாய் பூஜிக்கிறார் . எங்கள் குல தெய்வம் சின்ன நம்பி சாஸ்தா (திருநெல்வேலி யிலிருந்து திருச்செந்தூர் போற வழியில் உள்ள கருங்குளம் அருகில் வல்லகுளம் என்ற கிராமத்தில் உள்ளது) கோவிலுக்கு மட்டும் என் தாய் உள்ளே வருவார். மற்ற எந்த கோவிலுக்கும் செல்வதில்லை. என் தந்தை குல தெய்வமான சின்ன நம்பி சாஸ்தாவுடன் இரண்டறக்கலந்து எங்கள் குடும்பத்ததுக்கு காவல் தெய்வமாக உள்ளார் என்பது அவரின் நம்பிக்கை. என் தாயின் வாய்வழி மூலமாக என் தந்தை, குல தெய்வம் பற்றிய கதைகள் அடுத்த தலைமுறை பேரக்குழந்தைகளுக்கு பரவி கொண்டிருக்கிறது. என் கண்முன்னே ஒரு நாட்டார் தெய்வம் உருவாகி கொண்டுள்ளது.
இப்படித்தான் இந்த நாட்டார் தெய்வங்கள் உருவாகி இருப்பார்கள் என்று கணிக்கயிலேய, சில கதைகள் வேறொரு நாட்டார் தெய்வங்களையும் காட்சி படுத்துகின்றன. வாழ்க்கை பயணத்திலேயே விதியில் உழன்று இறந்தவர்கள் , அப்பாவிகள், துரோகம் இழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள், என்று சாதாரண மனிதர்களும் மக்களின் மன்சாட்சியினாலும் குற்றஉணர்வாலும் கடவுளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். மிக தொன்மையான, கோபம் கொண்ட நாட்டார் தெய்வங்கள், எவ்வாறு சமண மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு சாந்த தெய்வங்களாக மாறின, பின்னர் இந்து மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு எவ்வாறு தேவதைகளாக மாறின என்ற வரலாறு வடிவம் சில கதைகளினூடாக வெளிப்படுகிறது. தத்துவங்களும் பெருந்தெய்வ வழிபாடும் கோபுரங்களாக நிற்கையில், அடியில் உள்ள வலுவான அடிப்படை, மண்ணில் உழலும் இந்த நாட்டார் தெய்வங்களால் ஆனது என்பதும், இந்து மதத்தின் அடித்தளமே அவைதான் என காட்சி படுத்துகின்றன. இந்து மதம் எந்த நாட்டார் தெய்வ வழிபாட்டையும் அழிக்காமல், தத்துவ கோட்பாடு மூலம் தன்னுள் உள்ளிழுத்து கொண்டுள்ளது. விலகிநின்று மரியாதையுடன் வணங்கும் பெருதெய்வ வழிப்பாட்டுடன், தோலில் கைபோட்டு உரிமையாக கேட்க முடிகிற நாட்டார் தெய்வ வழிபாடும் பக்தியின் வெளிப்பாடாகவே கருதுகிறது இந்நூல். அதை பல்வேறு மக்களின் வாய்மொழி கதைகள் வழியாக முன்வைக்கிறார் ஜெயமோகன். அவரே சொன்னது போல மூன்றாம் தர பகுத்தறிவு கொண்டு அணுகினால் இந்த புத்தகம் உங்களிடம் பேசுவதற்க்கு எதுவும் இல்லை. கனிந்த மனம் கொண்டு அணுகினால் சிலவற்றை புரிந்து கொள்ளலாம்.
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.