"கேளடா…! பொன் வேல் ஏந்திய கிளிக்கொடி வேந்தே! பெருங்களிறு விரட்டி, ஐந்நின்றுரில் தன்னுயிர்நீத்த பெருநிலக்கிழாரின் தலைமகன் நானடா!" " தன் நிலம் விற்று, பிறர் நலம் காண, ஈகையில் அழிந்த பெருங்குடி எனதடா!" என்று கவிதை நடையில் கதையை கூறவே எண்ணினேன். ஆனால் என்னுடைய கற்பனை, அனைவரையும் போய் சேர வேண்டுமெனில் பொருள் செறிந்த வார்த்தைகளை விட அழகை மெருகேற்றும் நடைமுறை வார்த்தைகளை பயன்படுத்தினால் அனைவருக்கும் எளிதாக புரியும் என்று எண்ணி இக்கவிதை நடையை மாற்றி, கதை வடிவிலேயே எனது கற்பனையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இக்கதை எனது கற்பனையில் உண்டான ஓர் மன்னனின் வாழ்க்கைக்கதை. ஒரு சாதாரண மானுடன் எவ்வாறு தன்னை பேரரசனாக மாற்றிக்கொண்டான் என&