தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றியும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் மிக நுட்பமான அவதானிப்புகள் அடங்கிய கட்டுரைகள் இவை. இலக்கிய விமர்சனம் என்னும் துறை விமர்சனக் கோட்பாடுகளால் ஆனது என்பதையும் எப்படி இலக்கியம் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதையும் பயிற்றுவிப்பவை இக்கட்டுரைகள்.
பிரமிள் இக்கட்டுரைகளின் வழியாகத் தோற்றுவித்திருக்கும் உரைநடை தமிழுக்குப் புதிய வளமும் முகமும் உருவாக்குபவை. அதோடு பிரமிளின் அறிவின் ஆழத்தையும் அகலத்தையும் வெளிப்படுத்துபவை.
பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் படைப்புகள் கவிதைத் தொகுதிகள்
கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சிறுகதை தொகுப்பு லங்காபுரி ராஜா பிரமிள் படைப்புகள் சிறுகதைகள் சில