சக்திவேல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை, தான் இருக்கும் இடத்தை விட்டு குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு சென்று விடுவார், அந்த நேரத்தில் அவர் எங்கே இருக்கிறார், எந்த நிலையில் இருக்கிறார், யாருடன் உறவில் இருக்கிறார் என்பதெல்லாம் பொருட்டே அல்ல. அவர் அப்படி தான் வசிக்கும் சூழலை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு வயதே ஆகாமல் என்றும் இளமையாக இருப்பதை பற்றி மற்றவர்கள் பேச தொடங்கிவிடுவார்கள் என்பதே அதன் காரணம் சக்திவேல் பிறந்தது 14,000 ஆண்டுகளுக்கு முன். தனது 35ஆம் வயதுக்கு பின் அவர் மூப்படையவேயில்லை. இப்படி பட்ட சூழலில், ஒரு முறை தான் இடம் மாறும் நேரத்தில் அப்போது தன்னுடன் இருந்த நெருங்கிய நண்பர்களிடம் உண்மையை சொல்லிவிட எண்ணுகிறார், அதனால் அவர் பலவாறு
Every interesting thought by the author and explaining everything with the help of science and plot is very new for Tamil readers. Well written and interesting
பெயர், அட்டைப் படத்தை வைத்துத்தான் தொடங்கினேன். முன்னுரையிலேயே இது ஒரு தழுவல் என்றும் கதைச் சுருக்கமும் இருந்ததால் ஒரு மாறுதலுக்காக தொடர்ந்துப் படித்தேன். நாடகம் வடிவில் படித்தது புது அநுபவம். ஒரு காலத்தில் கணிப்பொறித் துறையில் வேலைப்பார்ப்பவர்களைத் தவறாக சித்தரித்தை போல, சக ஆசிரியரை வழி அனுப்ப வரும் ஆசிரியர்கள் குடிப்பது போல சித்தரிப்பதன் தேவை என்ன? 14000 ஆண்டுகளாக வாழ்ந்தவர் என்பது நம்பும்படியாக இல்லை. இராஜேந்திரன் கங்கை வரை செல்லவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த பத்தியிலே கங்கை வரை சென்றார் என்றால் எப்படி? எழுத்துப் பிழைகளுடன் படிப்பது எரிச்சலடையச் செய்கிறது.