சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும், அதேவேளையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரைவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துகளை வழங்கக்கூடும். இனக்குழுக் கலாச்சார மரபு ஆழமாக வேர்பிடித்துள்ள ‘இந்திய’ உபகண்டச் சமூகங்களின் ஆழ்மனங்களில் எதார்த்தங்களைக் காட்டிலும் அவைபற்றிய புனைவுகள் வலுவாக இயங்குகின்றன. சாதி மதம் முதலான சழக்குகள் நூற்றாண்டுக் காலங்களாக வீரியம் பெற்று வந்துள்ளன. இதைப் புரிந்துகொள்ளுவதற்கும் மாற்றுவதற்கும் அறிவியலும் நாத்திகமும் வரலாற்றுப் பொருள்முதல் நோக்கும் மட
Ranajit Guha was a historian of South Asia who was greatly influential in the Subaltern Studies group, and was the editor of several of the group's early anthologies. He migrated from India to the UK in 1959, and currently lives in Vienna, Austria. His Elementary Aspects of Peasant Insurgency in Colonial India is widely considered to be a classic. Aside from this, his founding statement in the first volume of Subaltern Studies set the agenda for the Subaltern Studies group, defining the "subaltern" as "the demographic difference between the total Indian population and all those whom we have described as the ‘elite’."
"தனது வரலாற்றை எழுதத் தன்னை அற்பணித்துக்கொண்டு அடங்க மறுக்கிற ஒரு விளிம்பு நிலையின் கம்மிய தொனிகளை.." உணரக் கூடிய புதிய வரலாற்றை எழுதப்பட வேண்டும் என குஹா கூறுகிறார்.
குஹா, காயத்ரி சக்ரபர்த்தி ஸ்பீவாக் போன்ற ஆய்வாளர்கள் பலர் தென்னாசிய நாடுகளில் நிகழ்ந்த காலனிய கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் பலதரப்பட்ட மக்களின் வரலாறு மறைந்துவிட்டது என குறிப்பிடுகிறார்கள் (குறிப்பாக விளிம்புநிலை மலைவாழ், காடு சார்ந்த மக்கள் மற்றும் தலித் மக்கள்.) இவர்களின் முயற்சியில் முன்வந்த 'Subaltern Studies' எனும் பலதுறைச் சார்ந்த ஆய்வுகளில் மூன்று கட்டுரைகள் மொழிபெயர்த்த நிலையில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
1. கலக மனிதனின் அடிப்படைக் கூறுகள் - ★★★★ 2. வரலாற்றில் கம்மிய குரல் - ★★★ 3. சமகால பண்பாட்டுப் பால் பற்றிய ஒரு கோட்பாட்டிற்குரிய சிக்கல்கள் - ★★★★
1850 - 1900 களில் வாழ்ந்த கலக மனிதரகளின் வாழ்க்கை முறை, காலனிய அடக்குமுறை மற்றும் காலனிய பண்பாட்டுப் பேறுகளையும், விளிம்புநிலை மக்களின் குரலற்ற போராட்டங்களையும், இன்றைய நிலையில் இந்திய (இந்துத்வ) சமுதாயத்தில் பெண்ணியத்தின் மீதுள்ள ஆதிக்க கலாசாரத்தின் அடக்குமுறை மற்றும் ஆதிக்கங்களை இக்கட்டுரைகள் மார்க்சியம் முதலிய கோட்பாடுகளின் மூலமாக விவரிக்க முயற்சிக்கின்றன. 'Subaltern Studies' போன்ற ஈடுபாடுள்ளவர்களுக்கு இக்கட்டுரைகள் பயனுள்ளதாக அமையும் என்று உணர முடிகிறது.