எதற்குள்ளும் நம்மால் அடக்க முடியாத வாழ்க்கை அனுபவங்களை அப்படியே நேர்மையுடன் எழுதியுள்ளேன். தேதி, மாதம், வருடம் வாரியாக ஒன்றன் பின் ஒன்றாக வரும் ஒவ்வொரு செய்திகளுக்குள் உங்கள் வாழ்க்கையும் உள்ளது. உங்களின் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் உங்களுடன் ஓராயிரம் நபர்கள் பயணித்து வந்திருப்பார்கள். அதில் சிலர் நெருக்கமாகப் பழகி முகவரி வாங்கிச் செல்லும் நபர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் எத்தனை பேர்கள் உங்களுடன் தொடர்ந்து இருந்துள்ளனர்? உங்களின் கல்லூரி வாழ்க்கை வரைக்கும் எத்தனை நண்பர்களுடன் பழகியிருப்பார்கள்? அதில் எத்தனை பேர்கள் இன்று வரையிலும் தொடர்பில் இருக்கின்றார்கள்? வேலையில் சேர்ந்து, மாறி மாறி வந்த வாழ்க்கையில் தொழில் ரீதியாக எத்தனை ப
முகத்திற்கு ஏதும் நிரந்தர முகவரி உண்டா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு முகம் என்பதை நூலாசிரியர், பல்வேறு வகையான பரிமாணங்களில் உருவகப்படுத்தி உள்ளார். உண்மையில் நாம் பார்க்கும் முகத்தை வைத்து ஒருவரின் குணாதியசத்தை எடை போட்டுவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல என்பதை பல உதாரணங்களால் எடுத்துக் காட்டியுள்ளார். இவரின் எழுத்து நடை எளிமையானது. புத்தகத்தை கவனமாக வாசியுங்கள். முகவரி இல்லா முகங்கள் என்ன என்பது உங்களுக்கு புரியும்.