2019ம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களுக்கு முன்னும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னும் இந்திய அரசியலில் சாதியும் தேர்தலும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை மையமாகக் கொண்டு மருத்துவர் பூவண்ணன் கணபதி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இக்கட்டுரைகள் இந்திய, தமிழக அரசியலில் சாதிய அழுத்தங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன. எதிர்காலத்தில் இவை முக்கியமான வரலாற்று ஆவணங்களாக விளங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. - Sen Balan