க்ரைம் சீன் இன்வஸ்டிகேடர் விக்ரமாதித்தனுக்கும், ஒரு கொலைஆயாளிக்கும் நடக்கும் பனிப்போரே இந்த குறுநாவல்... ஆங்காங்கே சிறிது காதல் சிதறி கிடந்தாலும், பெரிதும் பதற்றம் கொள்ள வைக்கும் கதை. இதை வழக்கம் போல் என்னுடைய பாணியில் மர்ம நாவலாக கொடுத்துள்ளேன். படித்து பார்த்து தங்கள் மேலான கருத்துக்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தெரிவியுங்கள். மனமார்ந்த நன்றிகள். poornimakarthic@gmail.com
குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரி எனில் அவரே குற்றவாளியையும் கண்டுபிடிப்பாரா? பல ஆங்கிலத் தொடர்களில் தனித்தன்மை வாய்ந்த அதிகாரிகள் உதவி செய்வார்கள், ஒரு சிலர் unofficial ஆகத் தான் கண்டுபிடிப்பார்கள்.
இருவர் மறைமுகமாக ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்வது, பனிப்போர். அப்படி இக்கதையில் இருக்கிறதா? அழுத்தமான கால் தடம் எனில் வீட்டினுள்ளா இல்லை வெளிப்புறமா? மண் தரையில் தானே அழுத்தம் பதியும்? குற்றத்தில் அந்த நால்வரின் பங்கு, எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்று விரிவாக சொல்லியிருக்கலாம். பரண் மேல் கிடைத்தது என்று கதையின் முடிவில் சொல்வதை விட அதற்கான hint ஐ கொடுத்திருக்கலாம். மற்றப்படி சில திருப்பங்களுடன் கதை முடிகிறது.