இலக்கிய வட்டம் பத்திரிகை நடந்துகொண்டிருந்த சமயம் அதில் அநுபந்தமாக வெளியிட நடுத்தெரு என்று ஒரு நாவல் தமிழில் எழுதினேன். அதை முடித்தபிறகு அதில் சில பகுதிகள்தான் வெளியாயின. அதையே வேறு கோணத்தில் நின்று ஆங்கிலத்தில் எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவதூதர் என்று பெயர் வைத்து சற்று விரிவான கண்ணோட்டத்துடன் ஒரு மாதத்தில் எழுதி முடித்துவிட்டேன்.
அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன் பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
Ka Na Su is one of the infamous writers of "manikkodi". This novel can be categorized under 'magical realism' genre. This novel revolves based on a prophet (Avathoothar) who came to a village Saathanoor. Through that character the author plotting the canvas of the villages customs and people's beliefs, practices. The interaction with the prophet and various people are interesting. The magical things that the prophet performs also interesting, though unrealistic (atleast its a fiction). The flow and gripping is really awesome. I didn't like the parts where the author advocates braminical supermacy. But considering the time its written and also i presume he belongs to that community. So it might have been a natural thing for him but unacceptable in the modern scales of social justice. One could read for this for reading pleasure for sure.