ஷேக்ஸ்பியர் ஒரு ஆங்கில நாடக எழுத்தாளர். இவர் தனது மிகச் சிறந்த நாடகப் படைப்புகளினால், உலகம் முழுக்க புகழ் பெற்றவர். இவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஷேக்ஸ்பியரின் நிஜ புகைப்படம் எதுவும் கிடையாது. அவரது உருவம் கற்பனையில் வரையப்பட்டதே. எல்லா சித்திரங்களிலும் ஷேக்ஸ்பியர் ஒரு நடுத்தர வயது மனிதராக சித்தரிக்கபடுகிறார். திருவள்ளுவருக்கு எப்படி கற்பனையாக ஒரு உருவம் கொடுத்தார்களோ அது போல தான் இன்றைய ஷேக்ஸ்பியர் உருவச்சித்திரமும் உள்ளது. 1564-ல் ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தில் உள்ள "ஸ்ட்ராட்போர்டு அபான் அவோன்" என்ற கிராமத்தில் பிறந்தார். ஷேக்ஸ்பியரின் அப்பா ஒரு தோல்பொருள்கள் விற்பனையாளர். ஷேக்ஸ்பியரின் அப்பா ஜான் ஷேக்ஸ்பியர், அம்மா மேரி ஆர்டன்.